பக்கம்:வையைத் தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வையைத் தமிழ் நிலையை அவர் காணவில்லை சமய்க் காழ்ப்பும் அதன் வழித்தகாத் செய்ல்களும் நிகழ்வதை எல்ல்ாம் அவர் நன்கு கண்டித்து ஒன்றிய சமய நெறியை உணர்த்து கிரு.ர். - . *; . '. ஆயிரம் தெய்வங்கள் உண்டொன்று தேடி அறியும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளிரோ? (அறிவே.1) என்று பாரதியார் அறிவே தெய்வமெனக்காட்டி, அவ்வறிவு நெறியில் வாழ்வதே வாழ்வில் செம்மை, கலம் பெற்றுச் சிறக்க வாழும் வழி என்பதையும் காட்டுகின்ருர், இன்று உலகில் எத்தனையோ தெய்வங்கள் தலை விரித்தாடுகின்றன. செத்துச் செத்துப் பிறப்பதைத் தேவென்று, பத்தி செய்மனப் பாறைகள் என்று ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்.ே அப்பர் பெருமாளுர் கூறியபடி கடவுளேப் பிரித்துக் கல்லாகிய நெஞ்சத்தோடு வாழும் மக்களே காட்டில் பலராக உள்ளமை காண்கின்ருேம். தமிழ்: காட்டுப்ப்ழஞ்சமயங்களாகிய சைவ வைணவம் ஆகிய இரண்டிலும் எத்தன் வேறுபாடுகள் உள்ளன! மெய்ச் சமய நெறி போற்றும் நல்ல சமயத் தலைவர்கள் எல்லாருங்கூடப்-பிற சம்பந்தர் மணிவாசக்ஞர் போன்றவருங் கூட ப் - சமயங்களைப் பழித்துரைத் கின்ருர்களென்ருல், இந்த நிலையை, என்ன சொல்லி இரக்கப்படுவது! இதேைல, தான் போலும் இன்று வரை நாட்டில் அமைதி காணவில்லே! சைவ, வைணவத்தில் மட்டு மன்றிப் பிற சமயங்களாகிய பெளத்தம், சமணம், கிறித்தவம், மகம் தியம் போன்ற வற்றுள்ளும் இந்த வேறுபாட்டு உணர்ச்சி இருப்பதை அறிகின்ருேம். இடைக்காலத்தில் கடந்த சிலுவைச் சண்டைகளும் (Wars of crusades), இன்று இலங்கை யில் காணும் காட்சியும், இடைக்காலத்தமிழ் நாட்டுச் சமயப் போராட்டங்களும் எதைக் காட்டுகின்றன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/108&oldid=921713" இலிருந்து மீள்விக்கப்பட்டது