பக்கம்:வையைத் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் காதலும் 103 இந்த வேறுபாட்டு கிலே கடவுள் பெயரால் இருக்கும் வரையில் காடும் உலகமும் நிச்சயமாகத் திருந்தர் இந்த வேறுபாடுக ளெல்லாம் நாட்டில் உண்டாகக் காரணம் என்ன? இடைக்காலத்தில் அவ்வச்சமயத்தில் தோன்றிய பல்வேறு சமயத் தலைவர்கள் தத்தம் கொள்கைகளைப் பரப்பித் தாம் தாம் உயர வேண்டும் என்ற ஒரே சுயலைக்குறிக் கோளாலே உண்டாக்கிய பல சாத்திரங்களே இவ்வேறுபாட்டு உணர்வுகளுக் கெல்லாம் காரணமாய் அமைகின்றன. மற்றும், ஒன்ருன இறைவனைப் போற்றிப் புகழும் நெறி விட்டு, கண்டவரைக் கடவுளாகக் காட்டி உலகை ஏமாற்ற கினைக்கும் சில உலுத்தர்தம் செயலும் காரண மென்பதும் நாம் அறிவோம். இவற்றையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்க்கிருர் பாரதியார். அவர் உள்ளம் குமுறுகிறது! குமுறுல் பாட்டாக வெளி வருகின்றது. பாடுகிருர்-பாடுகிருர்-மனம் சலிக்கும் வரையில் பாடுகிருர் நாமும் அவர் பாட்டைப் பாடு கிருேம்; விண் முட்டும் வரையில் பாடுகிருேம். ஆனல், செயலாற்றும் பொழுதுதான் சிந்திப்பதில்லை. இதோ அவர் பாடல்களுள் இரண்டொன்றைத் தருகின்றேன்: சாத்திரங்கள் ஒன்றும்காளுர்-பொய்ச் சாத்திரப் பேய்கள்சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம்ஒன் ருயிருந்தாலும்-ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்; தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச் சூதுசெய் சேர்களைப் பணிநதிடுவார்; ஆத்திரங்கொண்டே இவன் சைவன்;-இவன் அரிபக்தன்,' என்றுபெருஞ் சண்டையிடுவார்' 蒙,拳 (நெஞ்சு.) எனறும, சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளிரோl-பல பித்த மதங்களி லேதடுமாறிப் பெருமை அழிவீரோ!' (அறிவே தெய்வம். 3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/109&oldid=921715" இலிருந்து மீள்விக்கப்பட்டது