பக்கம்:வையைத் தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வையைத் தமிழ், என்றும், பல்வேறு மதங்களைத் தோற்றுவித்து அத ல்ை மாறுபாட்டை வளர்க்கும் கொடியரை எண்ணி கைந்து நைந்து பாடுகின்ருர், மேலும் அவர், தெய்வம் பலபல சொல்லி- பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்: உய்ய அனைத்திலும் ஒன்ருய்-எங்கும் ஓர்பொரு ளாவது தெய்வம்; "யாரும் பணிந்திடுந் தெய்வம் பொருள் யாவினும் கின்றிடும் தெய்வம் பாருக்குள் ளேதெய்வம் ஒன்று-இதில் பற்பல சண்டைகள் வேண்டா.' - என்று ஒருவனே தேவன் என்ற உயரிய தமிழ்க் கொள்கையை நிலைநாட்ட அரும்பாடு படுகின்ருர். உல கில் ஒன்ருன இறைவனைப் போற்றி வணங்குதலை விட்டு, அவனைப் பல கூருக்கி, அக்கூறுகளாலேயே தமக்குள் போரிட்டுத் தம்மைத்தாமே மாய்த்துக்கெள் ளும் ம்னித சமுதாயம் இந்த உண்மையை உணர்ந்து வாழின், கலமுண்டு. ஆல்ை, இன்றைய மனிதன் போக்கு வேறு நெறியில் செல்லுவதால், நாம் எங்குச் சென்று எப்படி நிற்போம் என்பதையே நம்மால் அறிய முடியாது தடுமாறுகின்ருேம் ஒன்றை மறைக்க மற்ருெரு கொடுங் தொழிலைச் செய்ய முன்னிற். கின்ருேம் மானமாக வாழவேண்டிய வகைவிட்டு, மானமிழந்து, மதிகெட்டு, மற்றவர் அடி நக்கி வாழும் நிலையில் மனித சமுதாயம் செல்கின்றது. - "மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர்க் குலகங்தனிலே - கிளியே! இருக்க நிலைமையுண்டோ!' என்றும், தேவியர் மானமென்றும் தெய்வத்தின் பக்தியென்றும் காவில்ை சொல்வதல்லால்-கிளியே! கம்புத லாற்ருரடி!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/110&oldid=921719" இலிருந்து மீள்விக்கப்பட்டது