பக்கம்:வையைத் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“124 வையைத் தமிழ் என்று இன்று உலகில் வாழும் மக்கள் உளசிலையைக் காட்டுவது போன்று பாரதியார் துரியோதனனை முன் ளிைறுத்திக் காட்டிவிட்டார். இவ்வாறு இன்றைய மனிதன் ஈரம் வீரம் இரண் டும் அற்றவனகி, கோழையாய், அஞ்சத் தகாததற் கெல்லாம் அஞ்சுபவனகி, அன்பில்லா வகையில் எத் துணைச் செல்வம் பெறினும் வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்த தொப்பத் தனக்கெனவும் பயன்படாது மற்றவரையும் வாழ விடாது, வெற்றுடம்பினய்ை உலகில் உலவுகின்ருன். இவ்வாறு அவன் சுயகலப் பேயாகித் திரிவதேைலதான் நாட்டில் பல்வேறு கொடு மைகளும் உலகெங்கணும் பல்வேறு போர்களும் கடந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் கொடுமை அகல வேண்டாவா! நல்லவர் உள்ளம், ஆம் அகலத் தான் வேண்டும்' என்று சொல்லும். ஆல்ை, அந்த உள்ளத்தின் எண்ணிக்கை காட்டிலும் உலகிலும் மிகக்குறைவே. எல்லாவற்றையும் மக்களாட்சி முறை யில்-பெருநிலை சிறுநிலை என்று கணக்கிடும் உலகில்நாமும் இந்த கலக்கேடுகளை அவ்வாறே கணக்கிட்டுத் தான் முடிவு காண வேண்டும். நல்லவர் குறைந்து அல்லவர் பெருகியிருக்கின்றனர் என்பது கண்கூடே! என்ருலும், நல்லவர் உளத்திண்மை உடையவர், அவர்கள் எண்ணிய எண்ணியாங்கு நேரிய வழியில் பெறுவார்கள் ஆகவே, இந்தப் பம்பாய்த் தமிழ்ச் சங்கம் வாயிலாக-இஃது ஆற்றும் பாரதி விழா வாயி லாக-நாட்டில் வாழும் நல்லவர்கள், திண்ணிய உன் வளத்தவராகிச் சிறந்து, தீமையை எதிர்த்தோட்டும் தீரமும், அற்ருர்க்கும் அலங்தார்க்கும் அஞ்சலெனக் கூறி ஆதரிக்கும் ஈரமும் பெற்றவராகித் தாமும் சிறங்து, வையத்தையும் வாழ வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன். வாழ்க ஈரம் வளர்க வீரம்! 女

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/130&oldid=921763" இலிருந்து மீள்விக்கப்பட்டது