பக்கம்:வையைத் தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரமும் வீரமும் '123's பல்வேறு துறைகளில் உழைக்க முன்வந்த பெரியவர் கள் அன்றுதொட்டு, இன்றுவரை இந்த உண்மைகளை யெல்லாம் உரைத்தும் உலகம் திருந்தவில்லை. அதில் அலும், இந்த இருபதாம் நூற்ருண்டின் இடைக்கால மாகிய நாம் வாழும் இந்த நாளில், மனிதன் தன்னை மறந்து மற்றவரை வாழவைக்க வேண்டிய தெய்வ நெறியை விடுத்து, தன்னை மறந்து விலங்காகிக் கொண்டு செல்கின்ருன். திருவள்ளுவரும் இயேசுவும், புத்தரும் காங்தியும் வாழ்ந்து அறநெறி காட்டியஉண்மை உணர்த்திய-அதே உலகிலேதான் இன்று. மனிதனும் வாழ்கின்ருன். ஆனல் இன்று மனித வாழ்வு இயங்திர வாழ்வாகவும் சுயநல வாழ்வாகவும் மாறிவிட்டது. பழிக்குப் பழி, நன்மைக்குத் தீமை,. கெடுத்துச் சிறத்தல் போன்ற கொடுங்கொள்கைகள் காட்டில் தலைவிரித்தாடுகின்றன. உண்மைக்கும் மாறு: பாட்டுக்கும் உலகில் என்றுமே பெரும் போராட்டங்க கள் நிகழ்ந்துகொண்டே இருப்பது மெய்தான். என்ரு லும், இன்று பொய்ம்மை வெற்றிகொள்வது போல இது வரை என்றும் கொள்ளவில்லே என்னலாம். பொய் மெய்யை வெல்கிறது! விலங்குணர்ச்சி மனித. உணர்ச்சியை மாய்க்கிறது! காமம் காதலே நசுக்கு. கிறது! தீமை நன்மையைத் தீய்க்கிறது! இந்தக் கொடுமைகளையெல்லாம் தொகுத்துத்தான் போலும் பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன் வாயால் விளக்கிக காட்டுகின்ருர் பாரதியார். "சதிசெய்தார்க்குச் சதிசெயல் வேண்டும்என் மாமனே!-இவர் தாம்என் அன்பன் சராசந்த னுக்குமுன் எவ்வகை { . விதிசெய் தார்? அதை என்றும்என் உள்ளம் மறக்குமே?-இந்த மேதினி யோர்கள் மறந்துவிட் டார். இஃதோர் விந்தையே: கிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே-எக்த நெறியி லைது செய்யினும், நாயென நீள்புவி துதிசெய் தேஅடி நீக்குதல் கண்டனை மாமனே!-வெறும் சொல்லுக்கேஅற நூல்கள் உரைக்கும் துணிவெலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/129&oldid=921759" இலிருந்து மீள்விக்கப்பட்டது