பக்கம்:வையைத் தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“$22 வையைத் தமிழ் மாதராலேயே வீடும் நாடும் ஒரு சேர விளக்கமுறும் என்பதையும் நம் நாட்டிலும் உலகிலும் இன்று பலர் கூறி வருகின்றனர். தமிழ் காட்டில் பண்டைக் காலத்தில் அறம் திறம்பா மாதர் பலர் சிறக்க வாழ்ந்ததைப் பண்டைய வரலாறு நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது. அவர்தம் செம்மை வாழ்வு சிறந்ததற்கு அவர்களுடைய நேரிய கொள்கையும் முறை திறம்பா கல்லொழுக்க நெறியுமே காரணங் களாகும். அவர்கள் வீட்டு வாழ்வில் காட்டும் காதல் நெறியும், நாட்டு வாழ்வில் காட்டும் அன்பு நெறியும், அமைதியில் உள்ள தம் பெண்மை நெறியில் வேண்டுங்கால் வேண்டியது விளக்கும் வீர உணர் கவுமே அன்றும் இன்றும் உலகை வாழ்விக்கின்றன. இந்த உண்மைகளையெல்லாம் தொகுத்துப் பாரதியார், 'கிமிர்ந்த கன்னடை நேர்கொண்ட பார்வையும் கிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்! (புதுமை214) டி.என்றும், 'அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்! ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்! துன்பம் தீர்வது பெண்மையி லைடா! சூரப் பிள்ளைகள் தாய்என்று போற்றுவோம்! (டிெ26;) என்றும் ஈரத்தையும் வீரத்தையும் காட்டிவிளக்குகிருர். இவ்வாறு வீரமும் ஈரமும் குடிகொண்ட உள்ளத் தினராய், வாழ்வாங்கு வாழும் வகை அறிந்து, கொடு மைக்கு அஞ்சாது தலே நிமிர்ந்து வாழவேண்டும் என்ற நெறிவிடுத்து, மக்களுள் பலர் வீணே காலம் கழிக்கின் _றனர். உலகில் மனிதத் தன்மை நிலவத்தொடங்கிய அன்றுதொட்டு, இன்றுவரை, இந்த உண்மைகளே யெல்லாம் அறிஞர் பற்பலர் கன்கு விளக்கிக் காட்டிக் கொண்டுதான் வருகின்றனர். சமயம், சமூகம் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/128&oldid=921757" இலிருந்து மீள்விக்கப்பட்டது