பக்கம்:வையைத் தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வையைத் தமிழ் கோவலன் ஊர்விட்டுச் சென்றதை, 'வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியன் படர்நோயுற்று நெடுநிலை மாடத்து இடைநிலைத் தாங்கோர் படையம்ை ச்ேக்கைப் பள்ளியுள் வீழ்ந்த (புறஞ்சேரி. 67, 70) போது தன் கடிதம் கண்டும் கோவலன் திரும்பாத காரணத்தால் என்னுகின்ருள்? கோவலனைக் கூடிய காலத்து நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து இருக்கும் மாதவி, அவனைப் பிரிந்த காலத்து, 'இடைகிலத் தாங்கு படையமை சேக்கைப் பள்ளியில் வீழ்ந்த நிலையை நன்கு வேறுபடுத்திக் காட்டுகின் ருர் ஆசிரியர். எனவே, கண்ணகி போன்ற குலப்பிறப்பாட்டியர் கணவரைப் புணர்ந்த காலத்தும் பிரிந்த காலத்தும் எவ்வெவ்வாறு மகிழ்ந்தும் வாடியும் இருப்பாரோ, அதே நிக்லயில் தான் மாதவி யும் இருந்தாள் என்பதை மறக்க முடியுமோ? பின்பு கோவல்ன் இறந்தமை கேட்டு அவள் மேற்கொள்ளும் செயல் குலப்பிறப்பாட்டியர் செயலி லும் சிறந்து ஓங்குகின்றது. மாதவி தன்துறவும் கேட்டாயோ தோழி: மணிமே கலைத்துறவும் கேட்டாயோ தோழி' என்றுவாழ்த்துக் காதையில் கண்ணகியை முன்னிறுத் திப்பாடும் பாட்டினலே கோவலன் பிரிந்த பிரிவினை ஆற்ருத மாதவி துறவியாகி. பெளத்தசாரணர் அற வண அடிகளை அடைந்து. தன் அழகெலாம் கெட, பொருளை அறத்தாற்றிற் செலவிட்டுத் தன் எஞ்சிய வாழ்நாளைக் கழித்தாள் என அறிகிருேம். அதனினும் மேலாக, தன் மகள் மணிமேகலையையும் பரத்தை வாழ்வுக்குச் செலுத்தாமலும், இல்லற வாழ்விலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/32&oldid=921803" இலிருந்து மீள்விக்கப்பட்டது