பக்கம்:வையைத் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வையைத் தமிழ் பிறவியில் மாதவி, மணிமேகலை, சுதமதி மூவரும் அறவண அடிகளோடு பாதபங்கயமலையில் உள்ள புத்த பீடிகையைத் தொழுது போற்றினர்களென்றும், அந்தப் புண்ணிய வலத்தாலேயே இப்பிறவியில் இவர் மூவரும் புகாரில் தோன்றிப் போதித்தானம் புரிந்தறம் கேட்டனர் என்றும் மணிமேகலையில் துயில் எழுப்பிய காதையும், பாத்திரம் கொடுத்த காதையும், அறவணர்த் தொழுத காதையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. எனவே, மாதவியின் பிறப்பே தவத்தால் கோன்ற தனிப்பிறப்பு என்பதை உணர்தல் வேண்டும். இந்தப் பிறவியிலேயும் கோவலன் இறந்த பின், முன் சில்ம்பு காட்டியபடி, தாயும் சேயும் பெளத்தத் துறவியராகி, அறவண அடிகளைச் சார்ந்து, ஐவகைச் சிலத்து அமைதிகளே யெல்லாம் அறிந்து, நல்லறம், புரிந்து, மக்களுக்கும் கல்லவழி காட்டிகளாய் அமைந்தார்கள் என அறிகிருேம். தன் காதலனுக்கு மதுரையில் நேர்ந்த கொடுமையை மாதவி அறவண அடிகளுக்குக் கூறித் துறவு கிலேயை வேண்ட, அவரும் அத்துறவு நிலையையும், அதில் மேற்கொள்ள வேண்டிய பஞ்சசீலத்தையும் காட்டித் துறவு கொள்ளச் சொல்லுகிருர், இவ்வாறு துறவு நிலையை மேற்கொண்டதை அறிந்த வசந்தமாலையும் சித்திராபதியும் நானுடைய செயலென்றும், பரத்தையர் குலத்து வழக்கத்துக்கு மாறுபட்டது என்றும் கூறுகின்ருர்கள். இவர்களும் தாங்களே கேரில் கூற அஞ்சி, ஊரார் அப்படிக் கூறு கின்ருர்கள் எனக் காட்டும் வகையில் கூறுவதாக விளக்குகின்ருர் ஆசிரியர். 'வயந்த மாலையை வருகெனக் கூஉய் பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரைஎன,'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/34&oldid=921808" இலிருந்து மீள்விக்கப்பட்டது