பக்கம்:வையைத் தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி மாண்பு 29% சித்திராபதி சொல்ல, அவளும் ஆடல் பாடில் அனைத். துக் கலைகளிலும்: 'கற்றுத்துறை போகிய பொற்ருெடி கங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து' என ஊரார் கூறுவதாகக் கூறினள். இதைக் கேட்ட. மாதவி மனம் வெதும்பினள். ஆம் நாண் வேண்டு. வதுதான் எதற்கு காதலன் இறந்தது கேட்டதும் அப்படியே உயிர் விட்டிருக்க வேண்டும்; அவ்வாறு. விடாததற்கு! அல்லது எரி மூழ்கியாவது உயிர் விட் டிருக்க வேண்டும்; அவ்வாறு விடாததற்கு கற்புடைப் பெண்டிர் சிலர் கோற்றுத் தவம் இருந்து யாக்கை மெலிந்து வாடி இறப்பர்; அவ்வாறு கோலாமைக்கு! இப்படி இதற்கெல்லாம் காணவேண்டிய நான் காணுது உலகில் உயிர்வாழ்கின்றேனே! என எண்ணி எண்ணி இரங்கிக் கூறுகின்ருள். கணவன் இறந்ததும் சீற்றம் கொண்ட தெய்வமாகக் கண்ணகியாம் கற்புடைப் பெண்ணேக் காண்கின்ற நாம், அமைந்து கைம்மை நோன்பை மேற்கொண்டு, கணவனேடு: இறவாத நிலையை எண்ணி எண்ணிக் கவன்று வாடும். மாதவியாம் மாசில் மங்கையையும் காண்கின்ருேம். இவ்வுண்மையை, காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு கின்றே பொன்கொடி மூதூர்ப் பொருள் உரை இழந்து கல்தொடி கங்காய்! நாணுத் துறந்தேன்; காதலன் இறப்பின் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் நன்னீர்ப் பொய்கையின் களிஎரி புகுவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/35&oldid=921809" இலிருந்து மீள்விக்கப்பட்டது