பக்கம்:வையைத் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 . வையைத தமிழ் களிளி புகார் ஆயின்: அன்பரொடு . உடன்உறை வாழ்க்கைக்கு கோற்றுஉடம்பு அடுவர் பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து.' (ஊர் அலர் உற்ற காதை, 38-48) என்று மாதவி கூறித் தன் நிலக்கு இரங்கியதாகக் காட்டுவர் சாத்தனர். மற்றும் மணிமேகலையைத் தன் மகள்எனக்கூருது கண்ணகியின் மகள் எனவே காட்டுகின்ருள் மாதவி. இது சிறந்தி ஒன்றன்ருே மாதவி துறவை மேற் கொண்டாலும், மணிமேகலையேனும் பரத்தமைத் தொழிலுக்கு வரவேண்டும் என விரும்பிய சித்ராதி பதியை நோக்கி, "காவலன் பேருர்க் கணஎரியூட்டிய மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை அருந்தவப் படுதல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கை தீத்தொழில் படாஅள்." (ஊர் அலர். 54-57) என்று கூறிக் கண்ணகியின் மகள் தீச்செயலில் புகக் கூடாது; அவளும் தவநெறியை மேற்கொள்ள வேண் கடும், எனக் காட்டுகிருர். அவ்வாறே பின் இருவரும் இடையருத் தவநெறி கின்று துறக்கம் புக்கனர் எனக் காட்டுகிறது மணிமேகலை. இப்படிக் கோவலனுடன் வாழும் காலத்து அவன் வாழ்வே தன் வாழ்வாகஅவன் இன்பமே தன் இன்பமாக வாழ்ந்து-அவன் .பிரிவில் நைந்து கனிவாடி-அவன் இறந்தபின் தானும் தன் மகளும் துறவு நிலையை மேற்கொண்டு ஒழுக்கம் குன்ரு உயர் பெருஞ்செல்வியாகிய மாதவி மாண் புடையவளன்ருே இல்லே என மறுப்பர் யாரே! வாழ்க மாதவி மாண்பு வளர்க அவள் பண்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/36&oldid=921811" இலிருந்து மீள்விக்கப்பட்டது