பக்கம்:வையைத் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கலையுள்ளம் தமிழர்தம் வாழ்வு பல நூற்ருண்டுகளுக்கு முன் னமே வளம் பெற்ற ஒன்று. இந்த இருபதாம் நூற். ருண்டின் இடைக்காலத்தில் மனிதன் காட்டும் கை வண்ணத் திறன்களையெல்லாம் தமிழன் பல நூற் உருண்டுகளுக்கு முன்னமே காட்டக் கற்றிருந்தான். இந்த நாளில் காட்டையும் நகரையும் கலம் படுத்தும் பல்வகைப் பொறியியற்பணிகள் இரண்டாயிரம்' ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் காட்டில் நடைபெற்ற தைக் காண்கிருேம். "Engineering என்ற ஆங்கிலச் சொல்லைப்பொறியியல் எனத் தமிழில் பெயர்த்தெழுதி வயதிலே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. பொறி" என்பது இயந்திரம் எனவும், அதை இயக்கி கலம் காண்பவர் பொறியர்' எனவும், அத்துறைக் குப் "பொறியியல் எனவும் பெயர் கண்டார்கள் என்று காம் நினைக்கிருேம். எனினும், அதனினும் உயர்ந்த மற்ருெரு பொருளும் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஐம்புலனும் அதன் வழிநுகரும் பொறியுணர்வும் தமிழர் பழங்காலத்தில் கண்டவை. எனவே, அப் பொறி நுகர்வுக்குப் பயன்படுவகையில் பொறியர்’ களது (Engineers) செயல்கள் இருக்கவேண்டும் எனவும் கொள்ளலாம். நகர் அமைப்போ, கட்டட அமைப்போ, பிற பாலம் மு. த லி ய வ ற் றி ன் அமைப்போ, மின்வரிசை அமைப்போ பிற சாலை அமைப்பு முதலியனவோ வெறும்பயன் தரு .கிலேயில் மட்டுமன்றிப் பார்வைக்கு மகிழ்ச்சி தருவன வாக, பொறியுணர்வுக்கு விருந்தாக அமைய வேண்டு வனவாகவும் இயங்கவேண்டும் எனவும் கொள்ளல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/37&oldid=921813" இலிருந்து மீள்விக்கப்பட்டது