பக்கம்:வையைத் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வையைத் தமிழ். சிறப்புடையதாகும். ஆங்கிலத்தில் காணும்'Aesthetic Sense என்னும் வகையில் காண்பார் உள்ளங்கவர். தன்மையில் பொறியர் இயற்றும் சாதனைகள் அனைத் தும் அமைய வேண்டும். எனவே, பொறித் துறையில் பணியாற்றும் அனைவரும் வெறுஞ்செயல் உள்ளம் பெற்றவர்களாக மட்டும் இருப்பதோடமையாது, கலே யுள்ளம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தமிழர் கருத்தாகும். இந்த நூற்ருண்டின் இடைக் காலத்தில் பொறியியற் பணிகளுக்கிடையில் கலேயுள்ளம் காட்டும் வகையில் பல பணிகள் ஆற்றப் படுவதை மைசூர் விருந்தாவனமும், வைகைத் தேக்க மும், பைக்காராப் பூஞ்சோலையும், பிறவும் எடுத்துக் காட்டுகின்றன. எனினும், இக்காலக் கட்டடங்களில் அத்துணைச் சிறப்பாகக் கலேயுள்ளம் காட்டப் பெற வில்லை என்னலாம். மிகு பழங்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கட்டடத்திலே-நகரிலே-காட்டிலே பிற எல்லா அமைப்புக்களிலேயும் கலேயுள்ளம் கொண்டு செயலாற்றினர்கள் எனக் காண்கின்ருேம். அவர்தம் கலேயுள்ளம் அக்காலக்தெழுந்த இலக்கியங். களின் வழி நன்கு தெரிகின்றது. நாட்டு எல்லேப் பகுப் யிலும் நகரத் தெரு, சோலே முதலிய அமைப்பிலும், மாளிகை அமைப்பிலும் அவற்றுள் வாழும் மக்கள் தம் ஆடை அணிகள் அமைப்பிலும், பிற அமைப்புக்களி லும் அழகு தவழும் கிலேயை இலக்கியம் நன்கு எடுத் துக் காட்டுகிறது. வான்வழிப் பெய்யும் மழை நீரைத் தடுத்து, குளங்தொட்டு வள்ம் பெருக்கி அதல்ை ஒன் றுக்கு ஆயிரமாக விளைபொருள்களை விளைவிக்கும் மக்க ளது வாழ்வின் உயர் கிலேயை, • , சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் - காவிரி புரக்கும் நாடு கிழவோனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/38&oldid=921814" இலிருந்து மீள்விக்கப்பட்டது