பக்கம்:வையைத் தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயுள்ளம் 33 என்று பெருநராற்றுப்படை பாராட்டுகிறது. புற 15ானூறு ஒருகளிறு படுக்கும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோனே!" என அழகுபடக் காட்டுகிறது. ஒரு யானே படுக்கும் அத்துணை மிகச்சிறிய இடத்தில் எரு வளத்தாலும் நீர் கலத்தாலும் ஏழு யானைகளே ஆண்டு முழுதும் புரக்கத் தக்க நெல் விளையும் காடு என்று இதைக் காட்ட வங்த புலவரும் கலேயுள்ளம் கொண்டே காட்டுகின்ருர். இவ் வாறு மழை பெய்து பயிர் விளைய அடிப்படையான காரணம் வான வீதியின் கோள்களே எனவும், அக் கோள்களுக்குத் தலைவன் ஞாயிறு எனவும், அங்கு வளி யும் வெளியும் இயங்கும் நிலை இது எனவுங்கூட அறிக் தாற்போலப் புறம் காட்டும் காட்சியும் கலேயுள்ளம் வாய்ந்ததாகும். 'செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும், வளிதிரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும் என்ருங்குச் சென்றளந் தறிந்தோர் போல - இனத்துஎன் போரும் உளரே." (புறம். 30) என்னும் புறநானூற்று அடிகள் கோக்கத்தக்கன வாகும . இவ்வாறு வளஞ்சுரக்கும் காட்டில் நகர் அமைந்த நிலையைப் பழம்பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. அழகுபட இயற்றிய அரும்பெரு நகரங்களே இனிமை, யுற முன்வைத்தே பல பாடல்கள் காட்டில் எழுதப். பெற்றுள்ளன. அவற்றுள் புகாரைப்பற்றிய பட்டினப் பாலையும், மதுரையைப் பற்றிய மதுரைக் காஞ்சியும் சிறந்தன. சிலம்பும் மேகலையும் இவ்விருபெரு நகரங் 3 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/39&oldid=921815" இலிருந்து மீள்விக்கப்பட்டது