பக்கம்:வையைத் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வையைத் தமிழ் களையும் பிற சிற்றுார்களையும் பாராட்டுகின்றன. அவற்றுளெல்லாம் நகர் அமைப்பு உள்ளங்தொடும் கலை உணர்வோடு அமைந்திருத்தலேக் காணலாம். உருத்திரங்கண்ணனர் காட்டும் முட்டாச்சிறப்பின உடைய பட்டினமாகிய புகார் நகரில் இருந்த பல்வேறு கலன்களே, 'கண்ணுதற் கொத்த கன்னி ரிடங்களும் வேணவா மிகுக்கும் விரைமலர்க் காவும் சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் கோலம் குயின்ற கொள்கை யிடங்களும் (20: 65-68) பெற்றனவாக மணிமேகலை நன்கு எடுத்துக் காட்டு கின்றது. காண்பவர் விரும்பிச் சேரும் நீரிடங்கள், விரைமலர்க்கா, சாலே, கூடம், பொதியில் அனைத்தும் 'கொள்கையிடங்களாகக் கூறப்பட்டிருப்பது அறிந்து மகிழத்தக்கதாகும். இனி இந்தக் கைவண்ண இயற்கை கலம் காட்டும் புகார் நகரில், கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகும் மறையோர் இருக்கையும்' தனித்தனியாகச் சிறப்புற்று விளங்கின எனச் சிலப் பதிகாரம் காட்டுகின்றது. இங்ககரங்களில் வாயில் களும் மதில்களும் அழகுடன் திண்மை பெற்றுச் செம்பால் செய்யப் பெற்றனவாய் அமைந்து இருந்தன எனக் காட்டுகின்றனர் பழங்தமிழ்ப் புலவர். "குன்று குயின்றன்ன ஓங்குகிலை வாயில். (நெடுநல். 87-88) என நக்கீரர் சிறந்த தொழில் செய்து கைவரப்பெற்ற கம்மியர் திறம்படச் செய்த மலேயென ஓங்கி நிற்கும் பெருவாயில் என்று நகர வாயிலக் குறிக்கின்ருர். அவரே அவ்வாயிலுக்கு உட்பட்ட மாளிகைகளின் உயர்நிலையை, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/40&oldid=921819" இலிருந்து மீள்விக்கப்பட்டது