பக்கம்:வையைத் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையுள்ளம் 35. "வானுற நிவந்த மேல்நிலை மருங்கு (நெடுநல். 60) எனக் காட்டுகின்ருர். இந்த வாயில் மாளிகை முதலி யனவெல்லாம் செம்பிட்டுச் செய்த சிறப்பின உடை வியன என்பதை, - 'செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து' (மதுரைக். 485) என மாங்குடி மருதனரும் . "செம்பியன் றன்ன செய்யுறு நெடுஞ்சுவர் (நெடுநல். 1.12) என நக்கீரரும் நன்கு எடுத்துக் காட்டுகின்றனர். இவற்றைக் கொண்டுதான் பின்னர் வந்த கம்பர் இலங்கை நகருக்குச் செம்பாலாகிய மதில் இருந்த தென்பதைச் செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்’ எனக்காட்டுகின்ருர் போலும் இவ்வாறு திண்மையும் கலை கலமும் ஒரு சேரப் பொருந்திய மதிலும் மாளிகை களும் வாயிலும் பிறவும் அமைந்த கிலேயன்றி, வெற்றி டத்தில் போர்மேற் செல்லும் காலேயும் பிற வேளையும் கலே நலத்தோடு அமைக்கப் பெறும் பாசறைச் சிறப்புக்களை யெல்லாம் பத்துப் பாட்டுள் நெடுகல் வாடையும், முல்லேப்பாட்டும் நன்கு காட்டுகின்றன. இவ்வாறு நகரும், மாளிகையும், பாசறையும் பிறவும் கலேயுள்ளம் காட்டும் கல்ல கம்மியரால் ஆக்கப்பட்ட அருமை போற்றப்படத்தக்கதன்ருே இனி, இத்தகைய மாடங்கள் எவ்வெவ்வாறு கலேயுள்ளத்தோடு அழகு செய்யப் பெற்றுக் கவினுற விளங்கின என்பதையும் காண்போம். நகரில் உள்ள கல்ல மாடங்கள் காற்ருேட்டமுள் வளனவாய்ச் சிறந்து விளங்கின என்பதை, - "நெடுங்கால் மாடம்' (பட்டினப். 102) :பிறங்குங்லை மாடத்து உறந்தை' ( டிெ 285) எனப் பட்டினப்பாலை சிறக்கப் பாராட்டுகின்றது. அக் காற்று உட்புகும் வழிகளைக் காட்டும் சிலப்பதிகாரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/41&oldid=921821" இலிருந்து மீள்விக்கப்பட்டது