பக்கம்:வையைத் தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வையைத் தமிழ் "மான்கண் கால்.அதர் மாளிகை இடங்களும் (5:3) என்கின்றது. எனவே, காற்ருேடும் பலகணிகள் மான் கண்களைப் போன்று கலை கலத்தோடு அழகுற அமைக் கப்பெற்றனவென அறிகிருேம். மாளிகைகள் சுடுமண்ணுல் கட்டப்பெற்றன என்ற உண்மையையும் அக்கட்டடங்கள் யாதொரு குறைபாடும் இன்றிச் சிறந்து நின்றன என்ற பெருமை. யையும், சுடுமண் ஏரு வடுநீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடிமன வாழ்க்கை’ (சிலப். 14: 146, 147): எனச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. இம்மாளிகை யின் பூசு வேலைபற்றி மணிமேகலை ஒரு நல்ல குறிப் பினை நமக்குத் தருகின்றது. மாளிகைச் சுவர்களெல் லாம் கலே நலம் வாய்ந்தனவாகிச் சிறந்தன என அறி கிருேம், சாதாரணப் பூச்சிட்டு அதன்மேல் அழகிய பல உருவங்களே எழுதும் கலே கலத்தையும் இன்று காண் கின்ருேம். அக்காலத்தில் நெல், கரும்பு ஓடை, சோலை முதலியவற்றை அழகுபட எழுதிவைப்பார்கள் போலும்! இன்று கலேயுள்ளம் காட்டுவதாக எண்ணி ஆபாசப் படங்களைச் சுவரில் எழுதியும் மாட்டியும் வைத்து மகிழும் அநாகரிகம் போனற வாழ்க்கை நிலை அன்று இல்லே என அறிகிருேம். அவர்தம் எழுத்தை 'நல்வழி எழுதிய எனவே குறிக்கின்ருர். இயற்கை கலம் தோய்ந்த ஒடை சோலே முதலியனவும், உடலோம்பும் கெல் முதலிய விளைபொருள்களும் அழகுபட எழுதப்பெற்றனவாக அ றி கி ருே ம். சாதாரண வெண்சுதை அன்றிச் சுண்ணம் வைப்பது போன்ற அழகிய திண்ணிய பூச்சுக்கள் உடைய சுவர்களில் ஒன்றும் எழுதமாட்டார்கள் போலும் இன்றும் அவ்வாறு வெள்ளிய சுண்ணம் தீட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/42&oldid=921823" இலிருந்து மீள்விக்கப்பட்டது