பக்கம்:வையைத் தமிழ்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயுள்ளம் 37. பெற்ற பளிங்கு போன்ற அழகிய சுவர்களை அழகுபட ஒளி கிழல் விழுமாறு சிறக்கவைத்திருப் பதை பல செல்வர் வீடுகளில் காண்கிருேம். இவ்விரு வகைச் சுவர்களே உடைய மாடங்களையும், "கெல்லும் கரும்பும் நீரும் சோலையும் கல்வழி எழுதிய கலம்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்து உள்ளுரு எழுதா வெள்ளிடை வாயிலும்' (மணி. 6: 41-45) எனச் சாத்தனர் நன்கு எடுத்துக் காட்டுகின்ருர். இவ் வாறு குறையொன்றும் இல்லாது நிறை கலத்தோடு அமையும் அழகமைந்த சித்திர வேலைப்பாடுகளேயெல் லாம் எண்ணித்தான்போலும், கலைமகள் வாழிடம் காட்ட வங்த இந்த நூற்ருண்டின் கவிஞர் பாரதியார், கோதகன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈத னைத்தின் எழிலிடை யுற்ருள் இன்ப மேவடி வாகிடப் பெற்ருள்." எனப் பாராட்டுகிருர்! இனி, அகநானூற்றிலே புலவர் இவ்வாறு அழகு பட அமைக்கப்பெற்ற ஒரு மாளிகை நிலைகெட, கேட்பாரற்று, அழகற்று, அதில் வாழும் புருவும் விரும்பாது துறக்க, அதில் எழுதப்பெற்ற கடவுட் கோல அழகோவியங்கள் மாற, நெடுஞ்சுவர் வீழ, புல்லென்றிருந்த கிலேயை, 'இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறத் துறந்த மரஞ்சோர் மாடத்து எழுதணி கடவுள் போகலின் புல்லென்று *: . ஒழுகுயலி மறந்த மெழுகாப் புன்திணை' (அகம். 167)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/43&oldid=921825" இலிருந்து மீள்விக்கப்பட்டது