பக்கம்:வையைத் தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வையைத் தமிழ் எனக் காட்டுகின்ருர். இவ்வாறு பழங்காலத்தில் பல மாடங்கள் அழகொடு ஆக்கப்பெற்றுச் சிறந்தனவென வும் அவற்றுள் ஒருசில காப்பாரற்று கிலேகெட்டன எனவும் அறிகிருேம். மாடங்களே எழில் மாடம் எனவே காண்பர் கலையுள்ளம் கொண்டவர் என்பதைப் பிற்காலத்தில், எண்தோளிசர்க்கு எழில் மாடம் எழுபது செய்தோன் என்று திருமங்கை ஆழ்வார் கோச்செங்கணுனைப் போற்றுவதால கன்கு அறியலாம். இன்று நாம் வாயிலுக்கும் பலகணிகளுக்கும் பல வகைத் திரைச் சீலைகள் அமைக்கிருேம்; கட்டில்களுக் கும் அப்படியே. அத்திரைகளில் பலவகை ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன. இதே நிலையில் சில்ப்பதிகார காலத்து மக்கள் தங்கள் அறைகளையும் கட்டில் முதலியவற்றையும் ஒவியத் திரைச்சீலைகளால் அழகு படுத்தினர் என்ற உண்மையை, 'ஓவிய எழினி சூழஉடன் போகி விதானித்துப் படுத்த வெண்களில் அமளி' (சிலம்பு. 6 19, 20) (எழினி-திரை). என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது. இனி, இத்தகைய மாளிகைகளில் வாழும் மக்கள் உடை வகையில் எவ்வாறு சிறந்தார்கள் என்பதும் காணலாம். உடை வகை அமைப்பும் பொறியியற். பகுதியில் ஒன்ருகவே இன்றும் போற்றப்படுகிற diei G(ml “Textile Technology' grgir.D LGSuţui o air . டல்லவா! எனவே, ஆடையில் கலே நலம் காண்பதும் பொறியியற் பகுதியேயாகும். இன்று இந்திய அரசாங் கத்தார் ஆடைகளே அழகிய வண்ணமுடையனவாக்கிப் பிறநாடுகளுக்கு அனுப்பிப் பொருள் பெருகச்செய்யும் அருமுயற்சியை அறியாதார் யார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/44&oldid=921827" இலிருந்து மீள்விக்கப்பட்டது