பக்கம்:வையைத் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையுள்ளம் 39, இன்று கண்ணேப் பறிக்கும் அழகிய பல ஆடை வகைகளை நாம் காண்கிருேம். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பும் மதுரையில் அத்தகைய ஆடைகளே அணிவோர் இருந்தனர் என்ற உண்மையை, ... k. 'கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம் (மதுரைக். 433j என மாங்குடி மருதனர் காட்டுகின்ருர். கண்பொரு புகூஉம்' என்பதற்குக்'கண்ணே வெறியோடப்பண்ணி' என உரை எழுதுகின்ருர் நச்சினர்கினியர். அக்காலத் தில் மெல்லிய நூலினல் ஆகிய உயர்ந்த ஆடைகள் இருந்த உண்மையை, மென்னுற் கலிங்கம் என அவரே காட்டுகின்ருர். இழை எடுத்துக் காட்டா வகையிலே இன்று பல ஆடைகள் உண்டாவன போன்று அன்றும் பல்வேறு ஆடைவகைகள் இருந்தன போலும்! அதை 'இழை அறிவாரா ஒண்பூங் கலிங்கம்’ (புறம் 383) எனப் புறநானூறு போற்றுகின்றது. இன்னும் பட்டினும், மயிரினும், நூலினும் பல்வேறு வகைப்பட்ட ஆடைகள் அக்காலத்திலேயே அமைந்து சிறந்தன என்பதை, "பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்விளைக் காருகர்’ (சிலம்பு. 5: 11, 12) எனவும், 'நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னு றடுக்கத்து' . - (சிலம்பு. 14; 20, 21) எனவும் சிலப்பதிகாரம் காட்டுகிறது. நக்கீரர் தம் நெடுநல்வாடையில், 'காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடு.அமை தூமடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/45&oldid=921829" இலிருந்து மீள்விக்கப்பட்டது