பக்கம்:வையைத் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - வையைத் தமிழ் என நல்ல வகையில் அழகுபடுத்தும் ஆடையைக் குறிக்கின்ருர். எனவே, இக்காலத்தைப் போன்று அன்றும் பல்வேறு பொருளாலும் பல்வேறு வகைப் பட்ட அழகிய ஆடைகளை கெய்தார்கள் என அறிகி ருேம். இடைக்காலத்தில் வாழ்ந்த சுந்தரர் அழகிய கரைகள் அமைந்து மயிற்கண் குறியிட்ட பட்டாடை களே எண்ணி, காகப்பட்டினக் கடற்கரையில், 'காம்பிளுெடு கேத்திரங்கள் பணித்தருளல் வேண்டும்’ என இறைவனே நோக்கி வேண்டுகின்ருர். இவ்வாறு மிகு பழங்காலத்து ஆடை வகைகள் சிறந்திருந்ததோடு அணி வகைகளும் சிறந்திருந்தன என்பதைச் சிலப்பதி காரம், மணிமேகலை, புறநானூறு போன்ற பழங்கால இலக்கியங்களிலும்,கம்பராமாயணம் போன்ற இடைக் கால இலக்கியங்களிலும் கன்கு காணலாம். எனவே, காட்டை அழகுபடுத்தும் செயல் தொடங்கி, வீட்டை யும் உடலையும் அழகுபடுத்தும் தொழில் வரை இன் றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கலேயுள்ளத்தோடு பொறியுள்ளம் காட்டிச் சிறந்தனர். இவைகளேயள்றி இடைக்காலத்தில் தமிழ் நாட் டில் எழுந்த கோயிலைப்பற்றி நாம் எண்ணும்போது, அக்காலப் பொறியியற்கலையைப் போற்ருதிருக்க முடியுமோ! மலேயேயில்லாத தஞ்சைப் பெருகாட்டில் வானேங்கிய கோபுரங்களும் மதில்களும் கொண்ட பெருங்கோயில்களை அமைத்த பிற்காலச் சோழர் காலத்தில் கட்டடக் கலேயிற் சிறந்த பொறியியல் வல்லுநர் வாழ்ந்தனர் என்பதை எண்ணின், தமிழர் பெருமிதம் அடைவரல்லரோ பிற்காலச் சோழர்தம் பெருங்கோயில்கள் அமைப்புகளும், பல்லவர்தம் காஞ்சி, மாமல்லபுரம் போன்றவற்றில் உள்ள குடைவரைக் கோயிற் சிற்பங்களின் சிறப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/46&oldid=921831" இலிருந்து மீள்விக்கப்பட்டது