பக்கம்:வையைத் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் 47 என்பதையும், அப்பருவத்தில் பற்றும் ஒழுக்கமே வாழ்வின் ஒழுக்கமாக அமையும் என்பதையும் நன்கு அறிகிருேம். நம் சைவ வைணவ சமயங்களில் இத் தகைய குழவிப்பருவம் கன்கு பேசப்படுகின்றது. உள்ளக் கோயிலில் வைத்து வழிபடும் தெய்வங்களைப் பிள்ளைப் பருவத்தில் கண்டு வழிபட விரும்பிய அடியார் பலராவர். அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் நிற்கும் ஆண்டவனே அன்பால் அரு கழைத்து ஆடவைக்கும் நல்லுள்ளம் அனைவருக்கும் அமையும் உள்ளமாகுமா? ஆகாது ஒரு சிலர்தாம் அந்த வகையில் ஆண்டவனேக் குழந்தையாகக் காண முடியும். அந்தக் காட்சிக்குத் தாமும் குழந்தையாக வேண்டும் என்பதன்றி வேறு என்ன கூற முடியும் ஆம் ஆண்ட வனைப் பிள்ளையாகக் காணும் தாய் உள்ளம்-அன்புள் :ளம்-மெய் அடியவர்களுக்கே அமையும். பார்க்கு .மிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனைப் பிள்ளைமை உருவத்தில் எதிரில் நடமாடக் காணும் கல்லுள்ளம் மெய் அன்பினைக் கொண்டவருக்கே அமையும். அந்த அன்பினல் ஆண்டவனேக் கட்டி விடலாம். 'அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே! அன்பெனும் குடில்புகும் அரசே! அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே! அன்பெனும் கரத்தமர் அமுதே' என்று அடியவர் ஆண்டவனே அன்புருவமாகவே கண் உடனர். அந்த அன்பிலே கல்லாதார் மனத்தனுகாக் கடவுள்-தேவரும் மறையும் இன்ன மும் காணு அந்தத் தேவ தேவன்-குழவியாக வந்து காட்சி அளிக்கிருன். அந்தக் காட்சியைக் காணும் அன்பர், உள்ளம் உருகித் தம்மை மறந்து பாட்டிசைக்கின்ருர், அத்தகைய பாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/53&oldid=921846" இலிருந்து மீள்விக்கப்பட்டது