பக்கம்:வையைத் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வையைத் தமிழ், மக்களும் பிற உயிர்களும் மட்டுமின்றிக் கடவுள கும் இந்த வகையில் பிள்ளைத் தன்மையில் போற்றப் படுவதைக் கண்டோம். நாட்டில் முருகனும் கண்ண அம் போற்றப்படுவதைக் குறித்தோம். உலகில் எத் தனையோ சமயங்கள் தோன்றி வளர்ந்தன; இன்றும் சில சமயங்கள் வாழ்கின்றன, அவைகளெல்லாம் தத் தம் கடவுளராக ஒவ்வொரு நிலையில் அப்பாலுக்கப்பா லாய பொருளைப் போற்றி வழிபடுகின்றன. மேலே காட்டுச் சமயங்களாகிய கிறித்தவ இஸ்லாமிய மதங் களும், நம் பாரத நாட்டுச் சமயங்களாகிய பெளத்த மும் சமணமும் தத்தம் அமைப்பு முறைக்கு ஏற்பக் கடவுள் நெறியைப் போற்றி வழிபடுகின்றன. இந்து சமயம் எனப்படும் சைவ வைணவக் கூட்டுச் சமயமும் தனக்கேற்ற வகையில் சமய வாழ்வை அமைத்துக் கொண்டு செல்கின்றது. இச்சமயங்களிலெல்லாம் .பிள்ளைப் பருவம் பேசப்பெறுகின்றது. இயேசு குழந்தை பிறந்த உடனே வெள்ளி விளக்கம் காட்ட, பல அறிஞர்கள் அவர் பிறந்த மாட்டுக்கொட்டி லுக்குச் சென்ருர்கள் என்று விவிலிய நூல் பேசுகிறது. மகமதுவின் இளமைப்பருவ நிகழ்ச்சிகளைக் குர்-ஆன் காட்டும். புத்தர் தம் கண்ணனைய மைந்தனை விட்டு வந்த நிலை-எண்ணி எண்ணி நின்ற நிலை-காட்டப் பெறுகின்றது. துறவு நிலையை வற்புறுத்தும் சமண சமயமும், வயது முதிர்ந்த நிலையில் துறவு பெறுவ தினும் இளமையில் பெறும் துறவு சிறந்தது என்ப தையும், இளமை கிலேயா வகையில் ஆற்றவேண்டிய செயலேயையும் காட்டுகிறது. இவற்ருலெல்லாம் நாம் குழவிப்பருவத்தின் அருமையையும், அக்காலமே மக்கள் வாழ்வின் சிறந்த பகுதி என்பதையும், அக் காலமே இன்னர் இனியார் என்ற வேறுபாடு காணுது கல்ல உள்ளம் கொள்ளும் கள்ளமறியாப் பருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/52&oldid=921844" இலிருந்து மீள்விக்கப்பட்டது