பக்கம்:வையைத் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்த் தமிழ் . 45. மனிதரையும் கடவுளரையும் விடுத்து விலங்கிடத் தும் பறவையிடத்துங்கூட இப்பிள்ளைமைப் பொலிவைா நாம் காண முடியும். வயதான சில விலங்குகளைக் காணக் கூசும் நமக்கு, அவற்றின் சிறு குழவிகளைக் கண்டால் ஒரு கல் உணர்வு பிறக்கிறது. கொல்லும் வேங்கையும் புலியும் கரடியும் குழவிகளாய் இக்கும். போது, கம்மால் கட்டித் தழுவப்பெற்று வளர்க்கப் பெறுகின்றன. அவை நல்ல சூழ்நிலையில் வளர்க்கப் பெறுமானல், தம் இனத்துக்கே இயல்பான கொடுமை. களே மறந்து, குற்றமற்ற விலங்குகளாக விளங்கு. மன்ருே பிள்ளேமைப் பருவமே வருங்காலப் பெரிய பருவத்தைச் சீராக்கும் கண்ணுடியாகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழி' அதுபற்றி எழுந்த ஒன்றன்ருே பறவையையும் விலங். கையும் விடுத்து, ஓரறிவுடைய மரம் செடி முதலியவற் றிலுங்கூடப் பிள்ளைப் பருவம் போற்றி வளர்க்கப் பெறுவதைக் காண்கிருேம். இளங்தென்னங்கன்றி னைத் தென்னம் பிள்ளை' என்றே வழங்குகின்ருேம். அப்பிள்ளையை நல்ல வழியிலே மண் இட்டுத் தண்ணிர் ஊற்றி, பக்குவப்படுத்தி, நல்ல இடத்தில் வளரவிட்டு வகைபெறப் போற்றி வருகின்ருேம். நாம் இளமையில் போற்றி வளர்க்கும் அந்த வகைக்கும் நிலைக்கும் ஏற். பவே அது பிற்காலத்தில் நன்றியுடையதாக அமைந்து தலையாலே தன் பயனேத் தருகின்றது. இந்த வகை யில் தென்னம்பிள்னை, கீரிப்பிள்ளை, அணிற்பிள்ளை போன்ற சில பிள்ளைகள். மனிதப் பிள்ளையினும் மேம் பட்டுச் சிறக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராயின், ஒவ்வொன்றின் சிறப்பும், பொலிவும், செம்மையும் அதனதன் இளமைப் பருவத்திலேயே நன்கு விளங்கு, கின்றன என்பதை அறிகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/51&oldid=921842" இலிருந்து மீள்விக்கப்பட்டது