பக்கம்:வையைத் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வையைத் தமிழ்' காலக் கதிரவனேயே கண்டு போற்றி, வாழ்த்தி, வழி :பட்டு, சிறக்க அவன் புகழ் பாடுகின்றனர். இந்த நிலை எல்லாப் பொருளுக்கும் ஏற்ற ஒன்றேயாகும். உலகில் காணும் எல்லாப் பொருளும் ஒரு காலத் தில் தோன்றியனவாகவே இருக்க வேண்டும். தோன் ருத் தன்மை வாய்ந்தவரான இறையனர் ஒருவர் தவிர, மற்ற அனைவரும் பிறந்து இருந்து வாழ்ந்து மறையும் கிலேயிலேதான் வாழ்கின்றனர் என்பதைப் பலரும் பல வகையாக எடுத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு தோன்றி வளரும் பொருள்களின் இளமையின் அழகு மக்கள் உள்ளத்தைப் பின்னிப் பிணைக்கும் உண் மையை நம் அன்ருட வாழ்வில் காண்கின்ருேம். பிள்ளே உள்ளத்தைக் கள்ளங் கொள்ளாப் பிள்ளை யுள்ளம்' என்று பாராட்டுவதையும் நாம் அறிவோம். இளமை யில் எந்த வேறுபாடும் தோன்ருது. குழந்தையும் கடவுளும் கொண்டாடும் இடத்திலே என்ற பழ மொழி காட்டில் உலவுகின்றது. எனவே, குழந்தைத் தன்மை கடவுள் தன்மையை ஒத்தது ஆகும். இயேசு பெருமான், குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்: பரலோக அரசு அவர்களுடையது, எனக் கூறியதாக விவிலிய நூல் விளக்கிக் காட்டுகிறது. நம் நாட்டிலும் முருகனேயும் கண்ணனையும் குழந்தை உருவத்தில் வழி படுவதை நாம் காண்கின்ருேம். கோவண ஆண்டி யாகக் காட்சிதரும் குழந்தை முருகனும், ஆலிலேயில் கண் வளரும் அருங்குழந்தை உருவுசேர் கண்ணனும் அவ்வச்சமயத்தவரையேயன்றி மற்றவர் மனங்களே :யும் கவருவதை நாம் அறிவோம். எனவே, மனிதரா யினும், கடவுளராயினும், அவர்தம் குழந்தைப் பருவமே நன்கு போற்றப்படுவதை நாம் அறிகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/50&oldid=921840" இலிருந்து மீள்விக்கப்பட்டது