பக்கம்:வையைத் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பிள்ளைத் தமிழ் 'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு செஞ் ஞாயிறு கீழைக் கடலில் தன் செவ்விய கிரணங்களே நீட்டி, உறங்கும் உலகத்தைத் தட்டி எழுப்புகின்றது. நாள்தோறும் விடியற்காலையில் இஃது அதன் சலியாத். தொழிலாக அமைகின்றது. அதன் தோற்றம் உலகம் உவக்க வழியாகின்றது. உறக்கத்தில் ஆழ்ந்து கிடக் கும் உலகம்-இருளில் மறைந்து கிடக்கும் உலகம்செய்வதறியாது புதைந்து கிடக்கும் உலகம் மகிழச் செங்கதிர் பரப்பி இளஞாயிறு மெள்ள மெள்ள மேலெழுகிறது. அது கீழைக்கடல் அலைகளிலிருந்து. சிறுகச் சிறுக மேலெழுந்து, தன் செங்கரம் நீட்டி உலகை ஒப்பனை செய்யும் காட்சியைக் கண்டோர். எண்ணி எண்ணி வியவாதிரார். பாட்டிசைக்கின்ற பாவலர்களெல்லாம் இக்காலேக் கதிரவனைப் போற். ருதிரார். - 'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு" (திருமுருகா) என்று நக்கீரரும், "முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடர்." (நற்றினை. 283): என்று மதுரை மருதன் இளங்ாகனரும், பிறரும்: பாராட்டியுள்ளனர். பகற்காலத்தில் மிகக் கொடிய வெம்மை விளேத்தும், மாலையில் மனத்துக்கு இன்பம். அளித்தும் நிற்கும் கதிரவன் கிலேகளேயெல்லாம். அவ்வளவாகப் போற்றிப் புகழாது, அறிஞர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/49&oldid=921837" இலிருந்து மீள்விக்கப்பட்டது