பக்கம்:வையைத் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளைத் தமிழ் - 49 எனினும், சிவனைப் பிள்ளையாக எண்ணிப் பிள்ளைத் தமிழ் பாடிய புலவர்கள் இல்லை என்னலாம். இது பற்றிச் சைவ அடியவர்களுள் பலரைக் கேட்டேன். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வரையில் அவர்தம் முழுமுதற்கடவுளருக்குப் பிள்ளைத் தமிழ் இல்லை என்றே கூறினர். ஆம்; சிவன் பிறவா யாக கைப் பெரியோன்' என்று இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே பேசப்பட்ட வனலனே. அந்த அடிப் படையிலேயே நான் இக்கருத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு சிவன் பிள்ளைத் தமிழைப் பெறவில்லை என்ருலும், அவன் குழவியாய் விளையாடிய தன்மையை ஒரிரு இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தத்தம் அடியவர்கள் தரணியில் நலமுற்று வாழ்வதற் காகக் கடவுளர் பல்வேறு வடிவங்களில் உலகில் தோன்றியுள்ளதாகப் புராண இதிகாச வரலாறுகள் உள்ளன. சிவபெருமான் மதுரை மாநகரில் ஒரு காலத்தில் குழவியாய் இருந்து வாய் விட்டுக் கிடந்தழுத காட்சியினைப் பரஞ்சோதியார் நன்கு சித்திரித்துக் காட்டுகின் ருர். தன் அடியவளாகிய கெளரியின் கலம் புரந்து அவள் அன்பை உலகுக்குக் காட்ட இறைவன் 'கிழவனகிப் பின் காளேயாய்க் கிஞ்சுகச் செவ்வாய்க் குழவியாய் விளேயாடிய விளையாட்டு இது. இதில் அச்சிவன் குழவியாகி அழுத சிறப்பினை, 'எழுதரிய மறைச்சிலம்பு கிடந்துபுறத் தலம்ப அன்பர் இதய மென்னும் செழுமலரோ டையின் மலர்ந்து சிவானந்தத் தேன்ததும்பும் தெய்வக் கஞ்சத் தொழுதகு சிற்றடிபெரிய விரல்சுவைத்து மைக்கணிர் துளும்ப வாய்விட்டு அழுதணயா டையிற்கிடந்தான் அனைத்துயிரும் ஈன்றுகாத் தளிக்கும் அப்பன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/55&oldid=921850" இலிருந்து மீள்விக்கப்பட்டது