பக்கம்:வையைத் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வையைத் தமிழ் 'தாய்விட்டுப் போனதொரு தனிக்குழவி எனக்கலங்கித் தயங்கித் தேடி ஆய்விட்டுப் பிரமன் அழ மறைகள் அழ அன்புடையாள் அன்பிற் பட்டு வாய்விட்டுக் கிடந்தழுத கைவு." (திருவிளே. விருத்த, 48-49) எனப் பாராட்டிப் பேசுகின்ருர் இவ்வாறு குழவிப் பருவத்தில் சிவன் இருந்த நிலை நமக்குத் தெரிகிறதே யன்றி அவன்மேல் அடியவர் பாடிய பிள்ளைத்தமிழ் கமக்குக் கிடைக்கவில்லே. இந்த நிலையிலேயே வைணவ அடியவர் திருமாலேக் குழந்தையாகக் கண்டு போற்றிய சில பாடல்களை நம் மால் காணமுடிகிறது. ஆகி மூலமாய் அமைந்த திரு மால் அடியவர் துயர் நீக்க மண்ணுலகில் இராம ஞகவும் கண்ணகைவும் தோன்றி வாழ்ந்த வகையினை நாமறிவோம். இரு பிறவிகளிலும் தாய் வயிற்றிருந்து பிறந்து குழந்தையாகத் தவழ்ந்தே அவர் வளர்ந்தார். எனவே, அவருக்கும் பிள்ளைத்தமிழ் உண்டு. அழகர் பிள்ளைத்தமிழ் பற்றி அறியாதார் யார்? அதுபற்றி நாம் இங்கு ஆராயவேண்டா. ஆயினும், அவர்தம் பிள்ளைப் பருவத்தை எண்ணி எண்ணி வியந்த அடியவர் குலசேகரர் தம் தாய் உள்ளத்தால் இராமனையும் கண்ணனேயும் காண்கின்ருர். தம்மைக் கோசலையாகவும் தேவகியாகவும் கற்பனை செய்து பார்க்கின்ருர். அந்தக் கற்பனையில் குழந்தையாக இராமனும் கண்ணனனும் காட்சி தருகின்றனர். எனவே, அவர் வாய் தாலாட்டுகிறது. - * மன்னுடிகழ்க் கெளசலையின் மணிவயிறு வாய்த்தவனே! தென இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர் கன்னிகன் மா மதில்புடைசூழ் கணபுரத்தென கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேல்ோ!' (தாலாட்டு, 1} என்று இராமனேயும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/56&oldid=921852" இலிருந்து மீள்விக்கப்பட்டது