பக்கம்:வையைத் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளைத் தமிழ் 5? "ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ! அன்பு பத்தடங் கண்ணினன் தாலோ! வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ! வேழப் போதகம் அன்னவன் தாலோ! ஏல வார்குழல் என்மகன் தாலோ! என்றென் றுன்னைஎன் வாயிடை நிறையத் தால்ஒ லித்திடும் திருவினை இல்லாத் தாய ரிற்கடை யாயின தாயே." (தேவகி புலம்பல், 1) எனறு கண்ணனையும் தாலாட்டு முகத்தான் அவர் பாடும்போது நாமும் நம்மை மறந்து அவராகிவிடுகின் ருேம். இங்க நிலையிலும் வேறு சில பிள்ளைத் தமிழிலும் திருமால் பிள்ளையாகப் போற்றப்படுகின்ருர், அவரும் பிறருக்கு மகய்ைப் பிறந்து வாழ்ந்த காரணத்தால். பிள்ளைத் தமிழ்கள் இத்தாலாட்டுக்கள் அடிப்படை ஆயிலே தோன்றி வளர்ந்தன என்னல் பொருந்தும். ஆம் பிள்ளைத் தமிழ் பாட அன்புள்ளம் அடிப்படை யாகும். இம் மாயன், கோசலை முன் ஆடி வருகின்ற சிறப்பினே, "எங்தை வருக! ரகுநாயகவருக! மைந்தன் வருக! மகனே இனிவருக! என்கண் வருக!என தாரு யிர்வருக்-அபிராம! இங்கு வருக! அரசே! வருக!முலை உண் 5 வருக! மலர்சூ டிடவருக!" என்று பரிவினெடு கோச லபுகல-வருமாயன்' என அழகாக வருகைப் பருவமாகப் பாடி மகிழ் .கின்ருர் அருணகிரியார். இவ்வாறு தனித்தனியாக உள்ள தாலாட்டும், வருகையும், இவை போல்வன பிறவும் ஒன்ருகப் பிள்ளைத் தமிழாக உருவெடுத்தன. இப்பிள்ளைத் தமிழ்ப் பற்றிப் பாட்டியலின் இலக் கணமும் பிற்காலததில் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/57&oldid=921854" இலிருந்து மீள்விக்கப்பட்டது