பக்கம்:வையைத் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வையைத் தமிழ் பிள்ளைச் செல்வத்தின் வழியே பிறப்பது அன்பாகும். அந்த அன்பே பின் உலகில் பிறரிடம் பரவிச் சென்று, யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பில் சிறக்க நிற்பது. இதேைலதான் போலும் வள்ளுவர் வாழ்க்கைத் துணை கலம் கூறி, பின் மக்கட்ப்ேற்றினை விளக்கிப் பின்பே அன்புடை மையை வைத்துள்ளார்! பிள்ளையின் அருமை உணர்ங் தவர்களே அன்பின் அருமை உணர்ந்து, அருள் உள்ளம் வாய்ந்தவர்களாகி, உலகை ஒத்து நோக்கித் ‘தமக்கென வாழாப் பிறர்க் குரியாள'ராய்ச் சிறப்பார் கள் என்பது அவர் காட்ட் விழைந்த கருத்துப் போலும்! . இப்பிள்ளைப் பாசத்தின் அடிப்படையில் எழுங் தனவே பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள். நாம் மேலே கண்டபடி கடவுளரைப் பிள்ளையாகக் கருதிப் போற்றும் நெறியில் பல பிள்ளைத் தமிழ் நூல்கள் எழுந்தன. அந்தப் பாடல்கள் முருகன் போன்ற ஆண் தெய்வங்களையும் சத்தி போன்ற பெண் தெய்வங்: களையும் முன் னிறுத்திப் பாடிய பாடல்களென வந்தன. சிவன், பிறவா யாக்கைப் பெரியோய்ை முழு. முதல் தெய்வமாகப் போற்றப் பட்டமையின், அவனைப் பிள் ளேயெனக்கொண்டு பிள்ளைத்தமிழ் பாடும் மரபு இல்லே. எனினும், சத்தியாகிய உமைக் கும், அவள் மக்களான பிள்ளையார், முருகன் இருவருக்கும் பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன. அவருள்ளும் சிறப்பாக என்றும் இளைய'ய்ை இருக்கும் முருகனுக்கே பிள்ளைத்தமிழ் அதிகம். குன்றுதோருடும். குமரகைக் காட்சி அளிக்கும் அம்முருகனை வழிபட்ட அடியார்கள் பல்வேறு வகையில் போற்றிப் பாராட். டிப் புகழ்ந்து அப்பிள்ளைமை வடிவை நினைந்துகினங்து பிள்ளைத் தமிழ் பாடினர்கள். தம்மால் அன்பு செய்யப் பெறுவாரையும் பிள்ளேத் தமிழில் பாடும் மரபு பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/58&oldid=921855" இலிருந்து மீள்விக்கப்பட்டது