பக்கம்:வையைத் தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளைத் தமிழ் 53 உண்டாயிற்று. இந்த நூற்ருண்டில் உண்டான காந்தி பிள்ளைத்தமிழ் அதற்கு ஒரு சான்ருகும். இடைக் கிாலத்தில் உண்டான குலோதுங்கன் பிள்ளைத்தமிழ் போன்றனவும் இதனுள் அடங்கும். பிள்ளைத்தன்மையின் சிறப்பு பலவாக நம் இலக் கியங்களில் காணப்படுகின்றன. சைவசமயத்தை வளர்த்தவர்களுள் சிறப்புறப் போற்றப்படுபவர்கள் பிள்ளைகளே. முதல் தேவாரத் திருமுறைகள் மூன்றும் தேனூறுவாய் பெற்ற தெய்வக்குழந்தை ஞான சம்பந்தருடையனவாகும். சுந்தரருக்கும் ஆண்டு ப னெட்டாகவே வகுத்துள்ளனர். சிவஞானபோதத்தை உலகுக்குத் தந்த மெய்கண்டார் பிள்ளையாகவே இருங் தார். அருணங்தியின் மூப்பும் முனிவும் பிள்ளேயுளத்த ஏாகிய குழந்தை மெய்கண்டாரிடம் குவிந்துவிட்டன எனக் காண்கிருேம். இதுபோன்ற வரலாறுகள் காட் டில் பலப்பல. இறையனர் களவியலுக்கு உரை கண்ட சங்க காலச் சான்ருேர், தம் உரையுள் சிறந்தது எது என அறிதற்கு ஐயாட்டைப் பிள்ளையாகிய உருத்திர சன்மனேயே நாடவேண்டியிருந்தது. வாய் திறவா திருந்தும், பல புலவர்தம் உரைகளைக் கேட்டுக்கேட்டு, சிறந்த உரை கேட்கும்போது கண்ணிர் பெருக்கி, அச் சிறப்பினைக் காட்டிய அப்பிள்ளையின் நில பெரிய நிலை யன்ருே இன்றும் இறை கருத்தறியத் திருவுளச் சீட்டிட்டுப் பிள்ளைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்லும், காட்சி காட்டில் உண்டே இவ்வாறு பிள்ளைத்தன்மை சமயம் வளர்க்கும் பெருநெறியாம் தெய்வ வீட்டு நெறி தொடங்கி, சாதாரண வீட்டு வாழ்வு வரை பெரிதாக மதிக்கப்படுகிறது. இவ்வாறு மதிப்புக்கும், சிறப் புக்கும், அன்பின் வளர்ச்சிக்கும், அறிவுத் தெளிவுக்கும் இடமாய் அமைந்த பிள்ளைத்தன்மையைப் பெரிய தமிழால் பாடுவது சிறந்த ஒன்றுதானே! ஆம்:அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/59&oldid=921858" இலிருந்து மீள்விக்கப்பட்டது