பக்கம்:வையைத் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வையைத் தமிழ் தெளிந்த உள்ளத்தினலேதான் இடைக்காலத்தில் புலவர் பலர் பிள்ளைத் தமிழ் பாடிப் பேறு பெற்றனர். சங்க காலத்தில் இல்லாத எத்தனையோ இலக் கியங்கள் பிற்காலத்தில் கோன்றி வளரலாயின். தொல்காப்பியத்தில் காட்டப்பெற்ற செய்யுளியல், யாப்பருங்காலமாக-காரிகையாக வளர்ச்சியுற்றது: உவம இயல் தண்டியலங்காரமாகப் பெருகியது. அது போன்றே இலக்கியங்கள் பலவாகிப் பல்கிப் பெருகு கின்றன. தொல்காப்பியர் காலத்தும் கடைச்சங்க காலத்தும் இலக்கியம் பெரும்பாலும் அகவற்பாவி லேயே அமைந்திருக்கக் காண்கிருேம். அதிலும் அகம் புறம் என்ற இருபொருள் நிலையில் அகப்பொருளைப் பற்றி அதிகமாகப் பாடும் முறையே காணப் பெறு: கின்றது. தொகை நூல்கள் எட்டில் ஆறு அகம் பற்றிய' பாடல்களே. அவ்வகப்பொருள் பாடல்கள் வழி மக்கள் உலகை மறந்து, உற்ற காதல் வாழ்வில் தம்மைப் பறிகொடுத்து, துன்பம் அறியாராய், உளம் ஒத்த வாழ்வில் வாழ்ந்தார்கள் என்பதைக் காண்கின் ருேம். அகவாழ்வில் அவ்வப்போது தோன்றும் சிறு சிறு ஊடல்களும், பிற வேறுபாடுகளும் அவ்வப் போதே களையவும் பெறுகின்றன. எனவே, அவர்கள் வாழ்வு இல்லற வாழ்வாக-வள்ளுவர் காட்டும் வழி யில் மற்றவரை வாழ விட்டுத் தாமும் வாழும் சிறப்பு வாழ்வாக அமைந்தது வியப்பிலலேயன்ருே அந்த இனப வாழ்வின் கான்முளைக் கருவே பிள்ளைத் தமிழ்க் குரிய இளங்குழந்தைகள். r காலம் மாறிற்று. பிற நாட்டார் ஆதிக்கம் தமிழ் காட்டில் தலே தூக்க ஆரம்பித்தது, கடைச்சங்க காலத்துக்குப்பின் உண்டான இருண்ட காலத்தில் பல வேற்று நாட்டு அரசுகள் தமிழ் நாட்டில் கால் கொண் டன. அது போன்றே பிற சமயங்களும் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/60&oldid=921861" இலிருந்து மீள்விக்கப்பட்டது