பக்கம்:வையைத் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் 55 பெற்றன. தொல்காப்பியர் காலத்தில் கடவுள் கெறி போற்றப்பட்டது என்ருலும், அது இப்படியன் இங் நிறத்தின் இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என் றெழுதிக்காட்டொளுத் தன்மையில் இருந்தது ©T6ᏡTöᎢ©IᎢL0, கடைச்சங்க காலத்திலேயே பிற நாட்டார் கதை களும், வழக்கங்களும், சமய மரபுகளும் தமிழ்நாட்டில் நுழையத் தொடங்கியதால், அதற்கு முன் இங்கு வாழ்ந்த சைவ வைணவ சமயங்களுக்கும், வங்த சமண பெளத்த சமயங்களுக்கும் பல வகையில் மாருட்டங் களும் போராட்டங்களும் நடைபெற்றன என்னலாம். சமணம் பெளத்தத்தை வீழ்த்திய பின், ஏழாம் நூற் ருண்டில் சைவம் சமணத்தை வீழ்த்தியது. அன்றி லிருந்து சைவம் வைணவம் இரண்டும் தமிழ் காட்டுப் பெருஞ்சமயங்களாய் வாழ்ந்து வருகின்றன. சங்ககாலச் சமய நெறிக்கும் ஏழாம் நூற்ருண்டுச் சமய நெறிக்கும் எத்தனையோ வேறுபாடுக்ள் உண்டா யின. இறைவனே முன்னிறுத்தி அவனெடு பேசும் வகையில் பல தோத்திரப் பாடல்களே காயன்மார் களும் ஆழ்வார்களும் இயற்றலானர்கள். சங்க காலத் திற்கும் ஏழாம் நூற்ருண்டாகிய பல்லவர் காலத் துக்கும் இடையில் நடைபெற்ற சமயப் போராட்டத் தால் பெளத்தம் அழிய, சமணம் ஒரளவு வாழ,சைவம் வைணவம் மேலோங்க-அம்மாறுபட்ட செயலால் நாட்டில் பலப் பல கோயில்கள் உண்டாயின. பல்ல வரும், பின் வந்த சோழரும் சிறக்கக் கோயிற்பணி செய்யத் தொடங்கிய காரணத்தால் காட்டில் ஆயிரக் கணக்கில்.கோயில்கள் தோன்றின. எனவே,அவற்றை வாழ வைக்க விரும்பிய அடியவர்களும் பற்பல வகை யில் அங்கங்கே கோயில் கொண்டுள்ள கடவுளரைப் பண்ணுென்றப் பாட்டிசைத்துப் பரவத் தொடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/61&oldid=921863" இலிருந்து மீள்விக்கப்பட்டது