பக்கம்:வையைத் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வையைத் தமிழ் கினர். தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி போன்ற சமய இலக்கியங்கள் தோன்றலாயின. - காலவளர்ச்சிக்கு இடையிலே கலை வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் கொடர்ந்து நடைபெறுவது வரலாறு காட்டும் ஓர் உண்மை. எனவே, இவ்வாறு பதிகங்களாக எழுந்த தோத்திரப் பாடல்கள், சற்று விரிவடைந்து, பல பிரபந்தங்களாய் மாறின. மாலை, கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைக் கமிழ் போன்ற பல சிற்றிலக்கியங்களைத் தொண்ணுாற்ரு ருகக் கணக்கிட்டிருக்கிருர்கள். 'தொண்ணுருறு வகைப் பிரபங்கங்கள்’ என்றே அவற்றை வழங்குவர். அந்தச் சிற்றிலக்கியங்கள் எந்த அடிப்படையில் எழுங் தன என்று சொல்லல் இயலாது. உளங்குளிர்ந்தபோ தெலாம் உவந்து உவந்து பாடும். புலவன், தன் உள் ளத்தனைய உயர்வில் நின்று இலக்கியங்களைச் செய் தான். அந்த இலக்கியங்களைக் கண்டார்கள் தமிழ் நாட்டு இலக்கணப் புலவர்கள். 'இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல் தமிழ் மரபு. எனவே, தாம் கண்ட சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணம் எழுதினர்கள். தொல்காப்பியம்,கன்னூல் போன்ற இலக்கணங்கள் காணுத இலக்கிய மரபுககுப் பிற்காலத்தவர் இலக்கணம் கண்டார்கள். தம் காலத் தில் வாழ்ந்த இலக்கியங்களைத் தொகுத்து, அவற்றை ஆராய்ந்து, அவற்றின் இலக்கணங்களே முறைப்படுத்தி எழுதினர்கள். அதுவே 'பாட்டியல்' என்ற இலக்கண நூலாய் வெளிவந்தது. பாடடியலில் சிற்றிலக்கியங் களது இலக்கண அமைதி கன்கு பேசப்படுகிறது. இலககணத் தோற்றக் காலத்தில் இருந்த இலக்கியங் களேக்கண்டு அவற்றை மேல்வரிச் சடடமாக வைத்தே ஒவ்வொரு சிற்றிலககியத்துக்கும் இலக்கணம் வகுத் தார்கள். ஆம்! அந்தத் தொகுதியிலேதான் பிள்ளைத் தமிழ் இலக்கணமும் இடம் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/62&oldid=921865" இலிருந்து மீள்விக்கப்பட்டது