பக்கம்:வையைத் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளைத் தமிழ் 57; கவிஞன் தான் போற்ற வந்த தலைவனையோ தலைவியையோ குழந்தையாக்கிக்கொள்வன்; அக் குழந்தையின் மூன்ருங் திங்கள் தொடங்கி இருபத் தோராம் திங்கள் வரை இரண்டு திங்களுக்கு ஒன்ருகப் பகுத்துக்கொள்வன், அஃதாவது, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினென்று, பதின்மூன்று, பதினேந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று என்ற திங்கள் வரிசையில் ஒவ்வொரு பருவத்தையும் அமைத் துப் பத்துப் பருவங்களில் பிள்ளைத் தமிழ் பாடுவன்: அவ்வப்பருவத்தில் குழங்தைக்கு இயல்பாக உள்ள செயல், தன்மை. கிலே முதலியவைகளை அமைத்துப் பாடுவன்; அவற்றுள் முதல் ஏழும் ஆணுக்கும் பெண் ஆணுக்கும் ஒன்ருகவே அமையும். இறுதி மூன்றும் ஆணுக்கு வேருகவும், பெண்ணுக்கு வேருகவும் அமை யும். ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்குக் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம். வருகை அம்புலி, சிறு பறை, சிற்றில், சிறுதேர் என்ற பத்துப் பருவங்களும் அமையும். பெண்பாற்பிள்ளைத் தமிழுக்குக் கடைசியி லுள்ள சிறுபறை, சிற்றில், சிறு தேர் என்ற மூன்ற அனுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மானே, ஊசல் என்ற மூன்றும் இடம்பெறும். பிள்ளைப் பருவம் பற்றிய இவற்றைப் பருவம் என்பார்கள். எனவே, பத்துப் ப்ருவ்ங்கள் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகும். ஒவ் வ்ொரு பருவத்திலும் பத்துப் பத்து பாடல்கள் இடம் பெறப் பிள்ளைத்தமிழ் நூறுபாடல்களால் ஆகிய ஒரு பிரபந்த நூலாகும். அப்பாடல்கள் ஆசிரிய விருத்தப் பாவிலேயே அமைந்தனவாய் இருக்கும். சில பிள்ளைத் தமிழ் நூல்களிலே சிறுபறை,சிற்றில் சிறுதேர் என்ற அமைப்பு முறையும் உண்டு, கடைசி மூன்று பருவங் களுக்குத் திங்கள் கணக்கிடுவதற்குப் பதிலாக மூன்று ஐந்து, ஏழாம் ஆண்டுகளைக் கொள்வதும் -@. பறை முழக்குவதும், தெருவிடை கடந்து, சிற்றிலக் கலைத்துக் குறும்பு செய்வதும், மண்ணில் சிறுதேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/63&oldid=921867" இலிருந்து மீள்விக்கப்பட்டது