பக்கம்:வையைத் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 . வையைத் தமிழ் உருட்டுவதும் இரண்டாண்டும் நிரம்பப் பெருத குழந்தைகளுக்குப்பெரிதும் பொருந்தாஎன்ற காரணத் தாலே இவ்வாறு மூன்று, ஐந்து, ஏழு என்ற ஆண்டு. களை அமைத்தார்கள் போலும். பெண்பால் பிள்ளைத் தமிழில் கழங்குக்குப் பதிலாக நீராடல் பருவம் அமை, தலும் உண்டு. , எனவே, பிள்ளைத்தமிழ்,தாம்பாட விரும்பும் தலை வனப் பிள்ளையாக்கி, உலகில் வாழும் பிள்ளைகளுக்கு உரிய இயல்பின் அப்பிள்ளைத் தன்மையின்மேல் ஏற்றி இன்னின்ன வகையில் அமைக, சிறக்க, பொலிக, விளை யாடுக, வருக, விளங்குக என்னும் முறையில் போற்றி வழிபடும் ஒரு சிறு காப்பியமாகும். இக்காப்பிய உறுப் புக்களாகிய பருவங்களைப்பற்றி ஒரு சில கண்டு மேலே செல்லலாம். - - காப்புப் பருவம் என்பது பாட்டுடைத்தலே. வனேயோ தலைவியையோ திருமால் முதலான தெய்வங் களே விளித்துக் காக்க வேண்டும் என வேண்டிக் கொள்வது. பெரும்பாலும் காப்புப் பருவத் தொடக் கத்தே முதலாவதாகத் திருமாலைத்தான் தொழி. வேண்டும் என்ற முறை உண்டு. அதற்குப் பாட்டி யலார் காரணம் காட்டுவர். 'அவன்ருன், - காவற் கிழவன் ஆக லானும், பூவின் கிழத்தியைப் புணர்த லானும், முடியும் கடகமும் மொய்பூந் தாரும் குழையும் நூலும் குருமணிப் பூணும் அணியும் செம்மல் ஆக லானும், முன்னுற மொழிதற் குரியன் என்ப., (24). என்பது அவர் காட்டும் காரணமாகும். எனவே, திரு. மாலே முதலாக வைத்துப் பின் சிவபெருமான், சத்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/64&oldid=921869" இலிருந்து மீள்விக்கப்பட்டது