பக்கம்:வையைத் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் - 59.5 விநாயகர், முருகன் முதலிய கடவுளரையும், கலைமகள், பிரமதேவர், இந்திரன் முதலியவரையும் வைத்து நூலுக்கும் பாட்டுடைத் தலைவன் நிலைக்கும் ஏற்பப் பத்துத் தெய்வங்களைக் காக்க வேண்டுமென வேண்டு. வர். சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாட வந்த மீட்ைசி’ சுந்தரம்பிள்ளே அவர்கள், பெரிய புராண அடியார் களையே திருத்தொண்டத் தொகை அமைப்பில் ஒருவர் பின் ஒருவராகப் பதிகவழி நிறுத்தி, அவரை வேண்டித் தம் பாட்டுடைத் தலைவராகிய சேக்கிழாரைக் காக்கவேண்டுமென வேண்டிக்கொண்டுள்ளார். துர்க்கை. சத்தமாதர்கள், தேவர்கள் முதலியோரையும், கங்கைவேல், மயில் முதலியவற்ற்ையுங்கூட வேண்டிப் பாட் டுடைத் தலைவரைக் காக்க வேண்டும் எனப் பரவுவது. உண்டு. இவ்வாறு எழுந்த நூலுக்கும் தலைவனுக்கும். ஏற்ப, கடவுளரை அழைத்து அவர்கள் தலைவனேக் காக்கவென வேண்டுவது காப்புப் பருவமாகும். குழங்தைகளுக்குக் காப்பு இன்றியமையாதது. 'வழிபடு தெய்வம் காக்க' என வாழ்த்துவதால் பாட்டுடைத் தலைவர் பழுதின்றி நோயற்று வளர்வர். நோயற்ற குழந்தையே,கன்கு ஓடி ஆடி வளரும். பின் வரும் செங்கீரை முதலிய பருவங்களுக்கெல்லாம் இக் காப்புப் பருவமே உயிர்காடியாய் அமைந்துள்ளது. நோய் நீங்கி நலம் பெற்று வளர வேண்டுங் தாய்மார் கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்குக் காப்பணிவன தைக் காண்கிருேம். நோயுற்ற குழந்தைகளை வழிபடு கடவுள் முன் கிடத்தி, மஞ்சள் துணியில் கெல்விதை முதலியவற்றை முடிந்து, அம்முடிச்சினேக் காப்பாக அக்குழங்தைகள் கையில் அணிவது வழக்கமல்லவா!' காப்புக்காக அமைந்தமையின் அத்துணி முடிச்சுக். காப்பே ஆயிற்று. இக்காப்பே காலப்போக்கில் பொன் லுைம் வெள்ளியாலும் கையை அழகுபடுத்தும் காப்புக்களாய்க் காட்சியளித்தது. இவ்வாறு முதலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/65&oldid=921871" இலிருந்து மீள்விக்கப்பட்டது