பக்கம்:வையைத் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&0 வையைத் தமிழ் பாட்டுடைத் தலைவன் நோயற்று வாழவும் வளம் பெற்ற குழந்தையாக இருக்கவும் அருளவேண்டிப் பிற கடவுளரை வாழ்த்துவது காப்பாகும். அடுத்துள்ளது. செங்கீரைப் பருவம், அப்பருவத் தில் குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்கும் கிலே பெறுவோம் பொருளறியாப் பெருமொழியைப் பேசும் குழவிகளின் சொற்களுக்கு யாரே பொருள் காட்ட வல்லார்? ஆண்டவனின் அறிவுறுத்தலும் அருமைக் குழந்தைகள் மழலையும் மற்றவரால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதன. எனினும் மக்கள் மழலச் சொற் களில் மயங்காத் தாயாரும் உண்டோ அம்மயக்கத் தில் ஆழ்ந்து அக் குழந்தையைச் செங்கீரை ஆடுமாறு :பாடுதல் செங்கீரைப் பருவம். அடுத்தது தாலப்பருவம் பெற்ற குழந்தையைத் தொட்டிலி லிட்டுச் சீராட்டிப் போற்றும் தாயர் காட்டில் நல்ல பாட்டிசைக்கின்றனரல்லவா! ஆம்: அந்தப்பாட்டு கிலேயில் அமையப் பெறுவது தாலப் பருவம். குழந்தையைத் தொட்டிலி லிட்டு அதன். முன்னேச் சிறப்புக்களை யெல்லாம் தொகுத்துக் தாலாட்டும் பருவமே பிள்ளைத் தமிழின் தாலப் :பருவம. இச்செங்கீரை தாலப்பருவங்கள் இரண்டும் இவ்வாறு அன்றிச் சில பிள்ளைத் தமிழினுள் மாறி வருவதும் உண்டு, இரண்டாவதாகத் தாலப்பருவமும் மூன்ருவதாகச் செங்கீரைப்பருவமும் வருதலும் உண்டு. அந்த முறைக்குச் செப்பரிய காப்புத் தால் செங்கீரை சப்பாணி என்று வெண்பாப் பாட்டியல் இலக்கணமும் வகுத்துள்ளது. அடுத்து வருவது சப்பாணிப் பருவமாகும். இதில் குழந்தை நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு கைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/66&oldid=921873" இலிருந்து மீள்விக்கப்பட்டது