பக்கம்:வையைத் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் . 6t. ஒன்று சேர்த்துக் கொட்டி முழக்கும். அந்த உட்காரும் நிலையாலே இதற்குச் சப்பாணி என்னும் பெயர் அமைந்ததென்பர் சிலர். கொட்டும் அமைப்புக்கே சப்பாணி என்ற பெயர் பொருந்தும் என்பது. பலருடைய முடிபு. எப்படியாயினும், குழந்தை உட்கார்ந்து கைகொட்டி மகிழும் பருவமே சப்பாணிப் பருவம். அங்கிலேயில் பாட்டுடைத் தலைவனகியல குழந்தையை உட்கார வைத்துக் கைகொட்டி விளையாட வைப்பது மகிழ்ச்சிக்குரிய தன்ருே! அடுத்த பருவம் முத்தப் பருவமாகும். முத்தம். வருகை, அம்புலி என்ற மூன்று பருவங்களே மிகச் சிறந்த பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் எனபர் அறிஞர். குழந்தையைப் போற்றித் தூக்கி மடியில் வைத்து, அதன் எச்சில் வாயால் முத்தம் பெறும் சிறப்பினைப் பெற்ருரே அறிவர். சில பிள்ளைத்தமிழ் நூலுள் இம். முத்தப்பருவம் சிறந்த முறையில் அமைக்கப்பெற். றுள்ளதைப் பயின்ருர் அறிவர். தம்பாட்டுடைத் தலே வனே-அண்டங்கடந்த அண்ணலே-அம்மையை-- குழந்தையாக்கி, அதன் முத்தத்துக்கு ஏங்கும் மெய்யடி யார் கிலே, அறிந்து இன்புறத்தக்க ஒன்ருகும். கடல் முத்தும் மருப்பின் முத்தும் பிற எம்முத்தும் இம்முத் துக்கு இணையாகுமா? அடுத்தது வருகைப்பருவம். எங்கோ அப்பாலுக் கப்பாலாய் இருக்கும் தம் பாட்டுடைத் தலைவனே அரு. கில் வருக! வருக! வருக!' என வாய் குளிர மெய் மகிழ. அழைக்கும் இப்பருவம் ஏற்றம் மிக்க ஒரு பருவமாகும். மதுரை மீட்ைசியின் முன் கின்று குமரகுருபரர் இவ்வருகைப் பருவப் பாடலுள் ஒன்ருகிய தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே! என்றபாடலைப் பாடும்போதுதான் அம்மை குழந்தைய வடிவாய் வந்து அருள் புரிந்தாள் என்று கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/67&oldid=921875" இலிருந்து மீள்விக்கப்பட்டது