பக்கம்:வையைத் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*32 வையைத் தமிழ் முருகனைக் குழந்தையாகப் போற் றும் அடியார்கள் ஆவணப் பல வகையில் போற்றி அருகில் அழைககும oföປ அறிந்தறிந்து மகிழ்தற்குரியதாகும். - அம்புலிப் பருவம் அடுத்து வரும் அழகிய பருவ மாகும். தம் குழந்தையை ஒக்கலையில் வைத்து, வானத்து ஊரும் சந்திரனத் தம் குழங்கையு -ன் விளை. .யாட வருமாறு அழைக்கும் தாயர் வீடுதொறும் இன் றும் உள்ளனர். இன்னும் சில நாட்களில் தம் குழந்தை களை அந்த அம்புலி மண்டலத்துக்கே அழைத்துச் செல்லும் வாய்ப்பும் உண்டாகலாம். வளரும் இளங் குழந்தைக்கு வானத்துத் திங்கள் ஒரு புரியாத புதுப் பொருளாகத் தோன்றும். அதன் பெயரும் குழந்தைக் குத் தெரியாது. என்ருலும், அது தோன்றும் திசை நோக்கிக் கை நீட்டும். குழந்தை அதை விளையாட்டுப் பொருளாகக் கருதுகிறது என எண்ணுகிருள் தாய்: உடனே அதைத் தன் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியோடு விளையாட வருமாறு அழைக்கிருள். இப் .பருவத்திலேதான் கவிஞன் தன் முழுத் திறனையும் காட்ட வாய்ப்பு இருக்கிறது. அம்புலியை ஆட அழைக் கும் போது தாய் கால்வகை உபாயங்களைக் கையாளு கின்ருள். சாம, பேத, தான, தண்டம் என அவற்றை கான்காகக் காட்டுவர். இன்னின்ன வகையில் நீயும் என் செ ல் வ னு ம் -செல்வியும்-ஒத்திருக்கின்ற காரணத்தால் உன்னத் தனக்குச் சரிநிகர் சமானமாக எண்ணி விளையாட அழைப்பதறிந்து ஒத்தவருடன் விளையாடவா, என அழைப்பது முதல் நிலை. நீயும் இவனும் இன்னின்ன வகையில் வேறுபடுகின்றீர்கள்; என்ருலும், இவன் அருள் உள்ளம் வாய்ந்தவன் ஆதலின, உன்னே விளையாட அழைக்கின்ருன்-ஆகவே வருக, என அழைப்பது இரண்டாவது. மூன்ருவது; "நீ இவனெடு விளையாட வரின், இன்னின்ன கலன் களைப் பெறுவாய், என்று காட்டுவது. நான்காவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/68&oldid=921877" இலிருந்து மீள்விக்கப்பட்டது