பக்கம்:வையைத் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வின்ளைத் தமிழ் 63 தாகிய இறுதி,'இத்தனை வகையில் வருங்கி அழைத்தும் வாராகிருப்பை கொல்லோ! வரவில்லையாயின் இன் ளிைன்ன வகையில் தண்டனை பெறுவாய்' என்று ஒறுக்கும் முகத்தான் அழைப்பது. இவ்வாறு கால் வகை உபாயங்களால் அழைக்கும்போது சிலேடை முதலிய அணி இலக்கணங்கள் அழகுற அமையப் பாடும் புலவர்தம் திறனை அவரவர் நூலுள்ளே காண -லாம். புலவர்கள் காட்ட இருக்கின்(ார்கள். அடுத்து வருகின்ற மூன்று பருவங்களும் ஆணுக் கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றன. அம்புலியை அழைக்கும் வரைக்கும் ஆண் குழந்தைக்கும் பெண் குழங்தைக்கும் வேறுபாடு இல்லை. வளர்ச்சி அடைய அடைய இருவேறு குழந்தைகளின் மனநிலைகளும் மாறுபடுகின்றன. மகளிர் கட்டிய சிற்றிலே விளையாட் டாக அழிப்பதும், சிறுபறை முழக்குவதும், சிறுதேர் உருட்டுவதும் ஆண்மகன் செயலாகிறது. பெண் மகளோ, அம்மனை ஆடி, ரோடல் புரிந்து, ஊசல் விளையாட்டை விரும்பிச் செல்வள். இந்த நிலைகளே கோக்கின் மூன்று ஐந்து ஏழாம் ஆண்டினும் ஆகும்’ என்ற இலக்கண விளக்கப் பாட்டியலின் வயது எல்லேயே இவற்றிற்குப் பொருத்தமாகும் என்று கொள்வதில் தவறில்லை. . தெருவில் சிறு பெண்கள் மணல் வீடு கட்டி கிலாச் சோறு சமைத்து விளையாடுவது வழக்கம். நிலாவினை வருக என்றழைத்தும் வாராமையாலே துணுக்குற்ற ஆண் குழ5தையின் உள்ளம் தன் கோபததை வேறு வகையில் காட்ட எண்ணியிருக்கும். அன்றிச் சற்று வளர்ந்த ஐயாட்டைப் பிள்ளையாயின், வேடிக்கையாகத் தெருபபுழுதியில் கோடு இட்டு விளையாடக கருதியு மிருக்கும். அங்கிலேயில் பெண் குழங்தைகள் மணல் வீடுகளும் அவன் கால் விளையாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/69&oldid=921879" இலிருந்து மீள்விக்கப்பட்டது