பக்கம்:வையைத் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓4 . . வையைத் தமிழ் டுக்கு இலக்காகும். அவன் பல வீடுகளை அழிக்க முயலுவான். அதுகாலே அப்பெண்கள் அவனே வேண்டி, அவற்றை அழிக்காதிருக்க வேண்டுவதே சிற்றிற் பருவம், இப்பருவத்தில் அடியவர் பலர் தம் வாழ்வாம் சிற்றில் அன்மப்பை அழிக்காதிருக்குமாறு: பல வகையில் தம் பாட்டுடைத் தலைவரை வேண்டுவர். அடுத்துச் சிறுபறை முழக்கியும், சிறுதேர் உருட்டியும் தெருவில் விளையாடும் இரண்டு நிலைகளை யும் இரண்டு பருவங்கள் வழியாக ஆசிரியர்கள் நன்கு, விளக்குவார்கள். . பெண்பாற் பிள்ளைத் தமிழில் அம்மனை ஆடும், சிறப்பு நன்கு போற்றப்பெறும். அம்மனை, கழங்கு, ஊசல் முதலிய விளையாடல்களைப் பெண் குழந்தைகள் மேற்கொள்வதை இன்றும் காண்கின்ருேம். தமிழ், காட்டில் மட்டைப் பந்தும் பிற மேட்ைடு விளையாட்டு களும் வரத் தொடங்கிய பின் இவை அதிகமாக இல்லே என்ருலும், பல கிராமங்களில் எல்லாப் பெண்களும் பாட்டிசைத்து இத்தகைய விளையாடல்களே ஆடுதலைக் காண முடியும். பாட்டுடைத் தலைவி அம்மனை விளையாடும் சிறப்பைப் பாடுவது அம்மனைப் பருவ மாகும். அது போன்றே கழங்காடும் பருவமும் ஊசற். பருவமும் கடைசி இரு பருவங்களாய் அமையும். கழங்கு அன்றி நீராடற் பருவம் உளது எனினும், நீர்ாடல் தனித்த விளையாட்டாக-அதிலும் சிறுபெண் பிள்ளை விளையாட்டாக-அதிகமாக இலக்கியங்களில் பேசப் பெருமையின், கழங்கு விளையாட்டைக் கொள்ளுவது பொருந்துவதாகும். இனி இத்தகைய பிள்ளைப் பருவப் பாடல்களில் ஆசிரியர் எது பற்றி அதிகமாகப் பேசுவர் என்ற ஐயம். எழலாம். நமது வீட்டுக் குழக்தையாயின், அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/70&oldid=921883" இலிருந்து மீள்விக்கப்பட்டது