பக்கம்:வையைத் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளைத் தமிழ் 65 இளமை, அருமை, விளையாட்டு முதலியவைகளைப் பாராட்டிப் பாடலாம். ஆல்ை, முருகன், அம்மை போன்ற பெருந்தெய்வங்களை அந்த நிலையில் வைத்துப் பேச முடியுமோ! எனவே, பிள்ளைமைப் பருவத்தைப் பாராட்டும் முறையிலே இப்பிள்ளைத் தமிழ் இருங் தாலும், பாட்டுடைத் தலைவன் செய்த அரும்பெருஞ் செயல்களையெல்லாம் வியந்து வியந்து போற்றும் கிலேயிலேயே பாடல்கள் ஊற்றுப் பெருக்கெடுத்து வரும். உதாரணமாக முருகனைப் பற்றிப் பாடப் பெறும் பிள்ளைத் தமிழில் அவன் குர்மாத்தடிந்ததும், கிரவுஞ்சம் அழித்ததும், மங்கையர் இருவரை மணந்ததும் ஆகிய பல்வேறு சிறப்புக்கள் பேசப் பெறும். குழந்தையாகக் கொண்டு பாட்டியற்றும் போது இவற்றையெல்லாம் கூறுதல் இழுக்கன்ருே என நினைக்கலாம், எனினும், மரபு வழி நின்று இலக்கண முறையில் கோக்கில்ை, இவ்வாறு கூறுவது தவறன்று என்பது புலகுைம். எனவே, தம் பாட்டுடைத் தலைவர் தம் பண்பாடு, வீரம், சிறப் பி ய ல் பு, பிற கல்லியல்புகள் அனைத்தையும் தொகுத்து, பத்துப் பருவங்களில் அகவல் விருத்தத் தால் நூறு பாடல்களில் பாடப் பெறுவதே பிள்ளைத் தமிழ் என்பது தெளிவு, அப்பாடலில் நாடும் நகரும், ஊரும், இயற்கையும், வளனும் பிற இயல்புகளும் நன்கு எடுத்துக் காட்டப்பெறும். - இத்தகைய பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டில் மிகப் பல. இடைக்காலத்தும் சென்ற சில நூற்ருண்டு களிலும் தமிழ் நாட்டில் சிற்றிலக்கியங்கள் பலப்பல வாகப் பல்கிப் பெருகின. அவற்றுள் ஒன்ருகிய பிள்ளைத்தமிழ் நூலும் மிக அதிகமாகத் தோன்றிற்று. அவற்றுள் சில அச்சு ஏறின; சில ஏட்டில் உள்ளன. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/71&oldid=921885" இலிருந்து மீள்விக்கப்பட்டது