பக்கம்:வையைத் தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இடைக்கால இலக்கிய வளர்ச்சி இலக்கியம் என்பது என்ன? இதைப் பலர் நன்கு விளக்கியுள்ளனர். உள்ளத்து உண்மை ஒளி பெற்று, வாக்கில் வாய்மையுற்று, உலகம் வாழப் பாடும்-உரைக் கும்.எழுதும் அத்தனையும் இலக்கியம் என்பது அறிஞர் ஆய்ந்து கண்ட முடிபு. அவ்விலக்கியம் சாவாவரம் பெற்றதாகும். சிறந்த இலக்கியம் கால வெள்ளத்தைக் கடந்து வாழ்வது. உலக மொழிகள் பலவற்றுள்ளும் இத்தகைய இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. எழுதப்பட்ட மொழி பேச்சு வழக்கற்ற போதிலும், இச்சாவா இலக்கியங்கள் கெடாத வகையில் வாழ்ந்து வருவதை இலத்தீன், வடமொழி போன்ற மொழியிடை வாழும் இலக் கியங்கள்வழி நாம் கன்ருகக் காண்கிருேம். சில இலக்கியங்கள், தாம் தோன்றிய மொழியே அழியி னும், தாம் அழியாது பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு, தோன்றிய நாட்டு எல்லேயையும் கால எல்லேயையும் கடந்து, எக்காலத் தும் யாவரானும் விரும்பப்படும் இலக்கியங்களே சிறந்த வாழ்விலக்கியங்கள் ஆகும். இத்தகைய இலக்கியங்கள் தமிழில் மிகப் பழைய காலத்திலேயே தோன்றியுள்ளன. இன்றைக்கு மூவா பிரம் ஆண்டுகளுக்கு முன்னும் தமிழில் இலக்கியங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/7&oldid=921881" இலிருந்து மீள்விக்கப்பட்டது