பக்கம்:வையைத் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வையைத் தமிழ் இருந்தன. ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னும் கடைச்சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் தோன்றின. அதற்குப் பின்பும் இடைக் காலத்தும் கேற்றும் இன்றும் பலப்பல இலக்கியங்கள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன. இவ்வாறு பண்டுதொட்டு இன்றுவரை தோன்றிய இலக்கியங்கள் தமிழில் மிகப்பல. அவற்றுள் கால எல்லேயைக் கடந்து இன்றுவரை அழியாது நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் சிலவே. எனினும், அச் சிலவும் தமிழர்தம் பழங்கால வாழ்வையும் பண்பாட் 'டையும் வரலாற்றையும் காட்டப் பயன்படுகின்றன. இத்தகைய சிறந்த இலக்கியங்களைப் பெற்றமைக்குத் தமிழன் பெருமையடைகிருன். ஆம்! அப்பெருமைக் கிடையில் அவன் சென்ற காலத்தின் அருமைகளே யெல்லாம் எண்ணிப் பார்க்கிருன். அவனுக்கு அவ்விலக்கியங்களின் தோற்ற வரலாறுகள் ஒரளவு விளங்குகின்றன. அவ்விளக்கம் வழியாக அவன் அவற்றைப் பல வகையாகப் பிரிக்கிருன். அவற்றுள் ஒரு பகுப்பே காலம் வழியாகப் பாகுபடுத்துவது. தொல்காப்பியர் காலங் தொடங்கி இன்று வரை உண்டான இலக்கியங்களே மூன்று வகையாகப் பகுப் பர். சங்ககால இலக்கியம், இடைக்கால இலக்கியம், பிற்கால இலக்கியம் என்று மூன்று வகையுள் எல்லா இலக்கியங்களையும் அடக்குவர். சங்ககால இலக்கியங் கள் பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்ற இரு பகுப் பில் அடங்கும். சிலப்பதிகாரம் போன்ற காப்பியங் களேச் சங்கம் மருவிய இலக்கியங்கள் எனச் சங்க காலத்தை ஒட்டி எழுந்தனவாகக் கணக்கிடுவர். இடைக்கால இலக்கியத்தின் கால எல்லே பல்லவர் காலத்தே தொடங்குவதாகும். அதன் எலலே விரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/8&oldid=921904" இலிருந்து மீள்விக்கப்பட்டது