பக்கம்:வையைத் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி § பிற்காலப் பாண்டியர் காலம் வரை அதன். கால எல்லை விரிந்து செல்லும். கி. பி. 7-ஆம் நூற்ருண்டு தொடங்கி 15 அல்லது 16-ஆம் நூற்ருண்டு வரை இக்காலத்தைக் கணக்கிடுவர். இதற்குப் பின் வந்த இலக்கியங்களைப் பிற்கால இலக்கியங்கள் எனக் கணக்கிடுவர். இவ்வாறு மூவகையாகப் பிரிக்கப்பட்ட கால எல்லையில் இடைக்கால எல்லையே மிகவிரிவுடைய தாகும். அக்காலத்தில் எழுந்த இலக்கிய வகைகளே மிகவும் அதிகமாகும். சங்க காலத்தை அடுத்துத் தமிழ் நாட்டில் ஒர் இருண்ட காலம் உருவாயிற்று என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நன்கு காட்டியுள்ளார்கள். அந்த இருண்ட காலத்தில் பிறநாட்டாரது படை எடுப்புக்கள் கடை பெற்றுள்ளன. பிற நாட்டு அரசியல், மொழி, சமயம், பண்பாடு, காகரிகம் முதலியன அந்த இருண்ட காலத்தில் தமிழ் நாட்டில் புகுந்தன. எனவே, இந்த அயலவர் நுழைந்த இடைக்காலத்துப் பின் உண்டான இலக்கியங்கள் சங்ககால இலக்கியத் திற்குப் பெரிதும் மாறுபட்டே அமைந்து விட்டன. பலப்பல புதுவகையான இலக்கியங்கள், புதுப்புதுச் சமயக் கருத்துக்களும் மாறுபட்டு உணர்ச்சிகளும் கொண்டு தோன்றலாயின. ஒரு புலவர், இந்த இரு வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை எண்ணிப் பார்க்கிருர். சங்ககால இலக்கியம் ஓவியன் ஒருவன் தன் கைத்திறன் எல்லாம் காட்டி, அழகிய வண்ண ஒவியம் தீட்டியது போன்று ஒளிவிடுகிறது என்றும், இடைக்கால இலக்கியம் ஒவியர் பலர் வரையறைப்படி வண்ணங்களே ஒழுங்காகத் தீட்டாது வாரி தெளித்தமை போன்று உள்ளது என்றும் காட்டு வர் அவர். எனினும், வண்ணத் தெளிப்பு, வகையான முறையில் இன் சிறனும், அழகாகக் கண்ணுக்கு விருங் தளிப்பது போனறும் அவ்வாறு வண்ணங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/9&oldid=921924" இலிருந்து மீள்விக்கப்பட்டது