பக்கம்:வையைத் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வையைத் தமிழ் தெளிக்கப் பெற்ற ஆடைகளை மக்கள் விரும்புவது போன்றும் அந்த இடைக்கால இலக்கியங்களும் மக்களால் ஒரளவு விரும்பிப் போற்றதக்க வகையிலே அமைந்துள்ளன என்னலாம். சங்ககால இலக்கியங். களை ஒத்துச் சிறந்தனவாகி, தமிழரின் தனிப் பண்புகளை விளக்குவனவாய் இடைக்கால இலக் கியங்கள் அமைந்தில என்ருலும், அவையும் தமிழ் காட்டு இலக்கியப் பண்பாடு பற்றிய வரலாற்று. வகையில் சிறந்தே வாழ்கின்றன என்பதை யாரே மறுக்க வல்லார்! - - இடைக்காலத்தை இலக்கிய ஆய்வு ஒட்டி இரு வகையாகப் பிரிக்கலாம்: முன்னது, கி. பி. 600 முதல் 1100 வரை அமைவது என்றும், பின்னது கி. பி.1100 முதல் 1500 வரை அமைவது என்றும் கணக்கிடலாம். இவ்வாறு இருவகைப் படுத்துவதன் மூலம் இலக்கியக் கால எல்லே ஒருவாறு அறுதியிடப்பெறும். இலக்கியக் கால எல்லேயைக் கணக்கிடுபவர் அரசர் அல்லது பெரும் புலவரது கால எல்லேயை வைத்தே கணக்கிடு வர். ஆங்கில இலக்கியங்களின் கால எல்லையைக் கணக்கிடும் ஆய்வாளர் சேக்ஸன் கால எல்லை’ என்றும் சாசர் கால எல்லை" என்றும், எலிசபெத்து அல்லது ஷேக்ஸ்பியர் கால எல்லே' என்றும், வரையறை செய்வர். அவ்வக்கால எல்லைக்கு முன்னும் பின்னும் வாழும் இலக்கியங்கள் மாறு பட்டிருப்பதால் மட்டும் அறிஞர்கள் இவ்வாறு பிரிக்கிருர்கள் என்று கூறிவிட முடியாது. இக் காலங்கள், பெரும் புலவர்கள்-சாசர், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள்-தோன்றி வாழ்ந்த காலங்களாகும். அவர்களது இலக்கிய நெறி, வளன், போக்கு இவற்றை ஒட்டியே பின்வரும் இலக்கியங்களும் தோன்றி வளர்க் 1. The age of Saxons. 2. The age of Chauses. 3. The age of Queen Elizabeth or Shakespere. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/10&oldid=921696" இலிருந்து மீள்விக்கப்பட்டது