பக்கம்:வையைத் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இலக்கிய வளர்ச்சி s தன என்பர். இந்த நிலையில் தமிழ் நாட்டு இடைக்கால இலக்கிய வளர்ச்சியில் மைல் கல்லாய் விளங்கிய புலவர் கம்பர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கக் காரணம் இல்லை. இக்கம்பரை முன்னிறுத்தியே மேலே கான் இடைக்கால இலக்கிய எல்லேயை இரண்டாகப் பிரித்தேன். கம்பர் காலத்தைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருப்பினும், பெரும்பாலாருடைய முடிபு அவர் பன்னிரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்பதே யாகும். எண்ணிய சகாத்தம் எண்ணுாற்றேழின் மேல் என்பதற்குப் பேரெண்ணுகிய ஆயிரத்தை ஒழித்து, நூறு எனக் குறித்தார் எனக்கொண்டு, கம்பர் பதினேயிரம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டவர் எனக்கொள்வதே பொருத்தமாகும் என்பர். பிற்காலச் சோழர் ஆட்சி உச்ச நிலையில் இருந்த காலத்தே கம்பர் வாழ்ந்தவர் என்பது தெளிவுற விளங்குதலாலும், எட்டாம் நூற்ருண்டினே ஒட்டிச் சோழப் பேரரசு சிறக்க வில்லையாதலாலும், அவர் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்ருண்டை ஒட்டியதே எனக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு கொண்டே நாமும் இடைக்கால இலக்கியத்தை அவருக்கு முன்னும் பின்னுப் தோன்றியனவாகப் பிரித்து மேலே செல் வோம். இருண்ட காலத்தில் பிற நாட்டார் ஆதிக்கம் தமிழ் நாட்டில் புகுந்தது என்பதைக் கண்டோம். வட விந்தியாவில் ஏற்பட்ட அரசியல் சமய மாறுபாடு களெல்லாம் அவ்வப்போது சிறிதளவு தமிழ்நாட்டு எல்லேயிலும் பரவின என்னலாம். சங்க காலத்திலே அறியாத சமய சமூக மாறுபாடுகள், இருண்ட காலத் துக்குப் பின் இங்கு இருக்கக் காண்கின்ருேம். பெளத்தம், சமணம் என்ற வடநாட்டுச் சமயங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/11&oldid=921717" இலிருந்து மீள்விக்கப்பட்டது