பக்கம்:வையைத் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வையைத் தமிழ் இரண்டும் சங்க கால இறுதியிலேயே தமிழ் காட்டில் புகுந்தன என்ருலும், அவற்றின் ஆதிக்கம் இருண்ட காலத்திலேதான் சிறந்து நின்றது என்னலாம். அவை: இரண்டும் ஒன்றற்கொன்று மாறுபட்டு, கலாம் விளேத்து, போட்டியிட்டுப் பின் தெளிந்த தமிழ் காட்டை நாம் ஏழாம் நூற்ருண்டில் காணும்போது சமணமே மேலோங்கியிருப்பதை அறிகிருேம். சிலப் பதிகார மணிமேகலைக் காலத்தில் சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டுப் பழஞ்சமயங்களாகிய சைவ வைணவத்தோடு ஒன்றி வாழ்ந்தன என்பதை அக்காப்பியங்கள் மூலம் அறிய முடிகிறது என்ருலும், ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்திலே அவை: இரண்டும் சைவ வைணவத்தோடு பெரிதும் மாறு பட்டுக் கலாம் விளேத்துத் தாமே இறுதி எய்தும் கிலே யினைப் பெற்றுவிட்டன. ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் பெளத்தம் காட்டில் இல்லை. சமணம் தமிழ்நாட்டுத் தனிச் சமயமே என மேலோங்கி நின்றது. என்ருலும், அதுவும் அந்த நூற்ருண்டின் முற்பகுதியிலேயே சைவ வைணவ சமயங்களுக்கு இடம் விட்டு விலக வேண்டிய நிலை உண்டாகி விட்டது. எனவே, சைவ வைணவ சமயங்கள் ஏழாம் நூற்ருண்டில் மீண்டும் தலைதுாக்க ஆரம் பித்தன. அன்று முதல் இன்று வரை தமிழிர்தம் பெருஞ்சமயங்களாய் அவை வாழ்ந்து வருகின்றன. இவ்வாருன சமய மாறுபாடுகள் காட்டில் குடி கொண்ட காரணத்தினலே இடைக்காலத்தில் தோன் றிய இலக்கியங்களுள் பெரும்பாலானவை சமய இலக் கியங்களேயாயின. இலக்கியங்கள் தாம் தோன்றிய காலத்தைக் காட்டும் வரலாற்றுக் கண்ணுடி என்பர் ஆய்வாளர். பாடுகின்ற புலவன் தன்னை மறந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/12&oldid=921739" இலிருந்து மீள்விக்கப்பட்டது