பக்கம்:வையைத் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால இல்க்கிய வளாச்சி . 7 உலகை நினைந்து, அவ்வுலகைச் செலுத்தும் அரசியல், சமூக வாழ்வு இவற்ருேடு தன்னைத் தொடர்புபடுத்திப் பாட்டிசைக்கினருன். எனவே, அவன் பாடல்கள் அவ்வக்கால நாட்டு நிலையைக் காட்டுவதில் வியப்பில்லே யன்ருே இக்கருத்து, தமிழ்நாட்டுக்கு மட்டும் இயைக் தது அன்று; உலகம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்றே. ஆங்கில இலக்கியத்தின் வழி அக்கால-அங்காட்டு அரசியல் மாறுபாடுகளை அறிய இயலும். அரசியல் அடியொற்றி இலக்கியங்கள் ஆக்குவதில் தமிழ்ப் புல வரினும் ஆங்கிலப் புலவர்கள் சிறந்து விளங்கினர்கள் எனக கொள்ளல் பொருந்துவதாம். ஆங்கில காட்டில் இலக்கியங்களும், அவற்றின் அடிப்படையான மொழி யும் காலத்தால் பிந்தித் தோன்றின. எனவே, அங் காட்டின் இடைக்கால இலக்கிய எல்லே கி. பி. 1066 முதல் 1660 வரை என வரையறுப்பர். அதையும் கி.பி.1066 முதல் 1400 வரை முன்னது எனவும், 1400 முதல் 1660 வரை பின்னது எனவும் இருவகையாகக் காண்பர். தமிழிலும் இவ்வாறு இரு வகையாகப் பிரிக்கலாம் என்பதைக் கண்டோம். இனி இவ்வாறு பிரித்த இடைக்கால ஆங்கில இலக்கியத்தைப்பற்றி அங்காட்டு அறிஞர்கள் கொண்ட கருத்தைக் காண் போம்: செம்மையான பழம்பேரிலக்கியங்களைக் காட்டி அலும் இடைக்கால இலக்கியம் அதிகமாக விரும்பப்படு வதாகும் என்பதே ஆங்கில அறிஞருள் பலர் கருத்து" தமிழிலும் அவ்வாறே எனச் சிலர் கருதுவர். அக்கருத் துக்கு ஏற்பவே இங்கு எழுத்தறியா மக்களும் கூடிப் பாடி மகிழும் வகையில் பலப்பல சிற்றிலக்கியங்கள் 1. Caxton deemed the literature of the middle ages more intelesting than the classical Antiquity.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/13&oldid=921761" இலிருந்து மீள்விக்கப்பட்டது