பக்கம்:வையைத் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வையைத் தமிழ் தோன்றி வளர்ந்ததைக் காண்கின்ருேம். சங்ககால இலக்கியங்கள் போன்று உயர்ந்த கடையில் பொருள் பொதிந்த வகையில் இடைக்காலத்தின் சிற்றிலக் கியங்கள் அமையவில்லை என்ருலும், கல்லாரும் கற்ருரும் பாடி மகிழத்தக்க வகையில் அவை அமைக் துள்ளன என்பதை அறியலாம். பரணி, பள்ளு குறவஞ்சி போன்ற இலக்கியங்களை இந்த வகையில் இயைத்துக் காணலாம். இடைக்கால இலக்கியங்களைப் பலவகையாகப் பிரிக்கலாம். தோத்திரப் பாடல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுகள், உரைகடைகள், அகப்பாடல்கள், புறப்பாடல்கள் போன்று பலவகை யில் இவ்விலக்கியங்கள் பிரிக்கப்பெறும். தோத்திரப் பாடல்களைச் சங்க இலக்கியத்தில் அதிகம் காண இய லாது. பத்துப் பாட்டில் முதலாவதாக உள்ள திருமுருகாற்றுப்படையும், பரிபாடலுள் வரும் முருகன் திருமால் பற்றிய பாடல்களும் தோத்திரப் பாடல்களும் என்னுமாறு அமைந்துள்ளன. பின்னர் வந்த தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி போன்ற தோத்திரப் பாடல்கள் இவற்றினும் வேறு பட்ட வகையில் அமைந்தன என்பதை அனைவரும் அறிவர். பாவினத்தில் பல வேறுபாடுகள் தோன்றி வளர்ந்த காலமாக இடைக்காலம் அமைந்து விட்டது. தாழிசை, துறை, விருத்தம் போன்ற பல்வேறு இன விகற்பங்கள் யாப்பில் தோன்ற, அவற்றின் துணேக் கொண்டு பல தோத்திரங்களும் சிற்றிலக்கியங்களும் உருவாகி, இடைக்கால இலக்கிய வரிசையில் இடம் பெற்றுவிட்டன. அவற்றுள் பெரும்பாலான சமயம் பற்றி எழுந்தனவே என்னலாம். சைவ வைணவ சமயத்தலைவர்கள், தம் மாற்றுச் சமயங்களாக எழுந்த பெளத்த சமண சமயங்களை வீழ்த்தும் கிலேயில் பலப் பல இடங்களுக்கு யாத்திரை செய்து, ஆங்காங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/14&oldid=921765" இலிருந்து மீள்விக்கப்பட்டது